Youtuber Irfan: இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி! - Tamil News | minister ma subramanian said that tamilnadu government will take action on youtuber irfan | TV9 Tamil

Youtuber Irfan: இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

இர்ஃபான்ஸ் யூ யூடியூப் சேனலில் சில தினங்களுக்கு முன்பு புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அதில் தனது மனைவி வீட்டில் இருந்தது முதல் குழந்தை பெற்றெடுத்தது வரை காட்சிகள் இடம்பெற்றிருந்தது. கடந்த ஜூலை 24 ஆம் தேதி அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த வீடியோவில் பிரசவ வலியால் அவர் துடிக்கும் காட்சியும், குழந்தை பிறந்தவுடன் அதை இர்ஃபான் கையில் ஏந்துவதோடு மட்டுமல்லாமல் தொப்புள் கொடியை வெட்டுவதும் உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.

Youtuber Irfan: இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

கோப்பு புகைப்படம்

Published: 

22 Oct 2024 14:29 PM

யூட்யூபர் இர்ஃபான்: தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்ட பிரபல யூட்யூபர் இர்ஃபான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில், குறிப்பாக சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பலரும் அதனை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பலரும் பலவிதமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் சட்ட விதிகளை மீறுவதால் அவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள், சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளம் ஆகியவை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்படியான நிலையில் தமிழகத்தின் பிரபல யூட்யூபராக திகழும் இர்ஃபான், “இர்ஃபான்ஸ் வியூ” என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார். உலக அளவில் ஒவ்வொரு இடங்களுக்கு சென்றும் அங்குள்ள உணவுகளை எல்லாம் ருசித்துப் பார்த்து அதனைப் பற்றி விமர்சனம் செய்து வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இவருக்கு யூட்யூப்பில் மட்டும் 40 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

மீண்டும் மீண்டும் சர்ச்சை

இதனிடையே இர்ஃபான்ஸ் யூ யூடியூப் சேனலில் சில தினங்களுக்கு முன்பு புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அதில் தனது மனைவி வீட்டில் இருந்தது முதல் குழந்தை பெற்றெடுத்தது வரை காட்சிகள் இடம்பெற்றிருந்தது. கடந்த ஜூலை 24 ஆம் தேதி அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில் அந்த வீடியோவில் பிரசவ வலியால் அவர் துடிக்கும் காட்சியும், குழந்தை பிறந்தவுடன் அதை இர்ஃபான் கையில் ஏந்துவதோடு மட்டுமல்லாமல் தொப்புள் கொடியை வெட்டுவதும் உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவை சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்த நிலையில் அந்த நிகழ்வு சர்ச்சையை கிளப்பியஉள்ளது.

Also Read: Aavin Ice Cream : ஐஸ்கிரீம்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் ஆவின்.. நவம்பர் 1 முதல் புதிய விலை அமல்!

மருத்துவ சட்டத்தில் பிரசவ அறையில் கணவன் அனுமதிக்கப்படலாம் என விதி உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான மருத்துவ முறைகளை  பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை உபகரணங்களை உபயோகிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

ஆனால் அறுவை சிகிச்சை அறைக்குள் வீடியோ எடுத்து அதனை யூட்யூப்பில் பதிவிட்டதோடு மட்டுமல்லாமல் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியதற்கும் இணையவாசிகள், மருத்துவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தவறான முன்னுதாரணம் எனவும் விமர்சித்துள்ளனர்.

மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்

இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை தரப்பில் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இர்ஃபான் இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியாக தெரிவித்துள்ளார். துறை ரீதியாக காவல் துறையில் நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளோம். அவரின் செயல் நிச்சயம் கண்டிக்கப்படக்கூடியது எனவும் அவர் கூறியுள்ளார்.

Also Read: தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது கண்ணில் தீப்பொறி பட்டால் என்ன செய்ய வேண்டும்?

இதனிடையே இர்பானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களை கைப்பற்றி செம்மஞ்சேரி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையிலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த முறை நடந்த சம்பவம்

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இர்ஃபான் தனது மனைவி கருவுற்றிருந்த நிலையில் அவரது கருவில் இருக்கும் குழந்தை என்ன பாலினம் என்பதை அறிவிற்கும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்தியாவில் சிசுவின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பதால் இர்ஃபான் செய்தது குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் அவர் கருவின் பாலினத்தை துபாய் நாட்டில் வைத்து கண்டறிந்திருந்தார். இருந்தாலும் இந்த வீடியோ பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டதுடன் பகிரப்பட்டது.

இணையத்தில் பிரபலமாக இருக்கும் இர்ஃபானின் இந்த செயல் பலருக்கும் தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி வீடியோவை நீக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதேசமயம் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து யூட்யூப்பில் இருந்து இர்ஃபான் அந்த வீடியோவை நீக்கினார். இர்ஃபான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரிக்க பொது சுகாதார துறை சார்பில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவ குழுவிடம் வாட்ஸ் அப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதால் இர்ஃபான் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் பட நடிகை தான் இந்த பாப்பா...
மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?