Karthigai Deepam 2024: மண்சரிவு எதிரொலி! திருவண்ணாமலையில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..!

Thiruvannamalai: அண்ணாமலையார் கோயிலில் வருகின்ற டிசம்பர் 13ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, சிகர நிகழ்ச்சி என்று அழைக்கப்படும் மகா தீபம் மாலை 6 மணிக்கு சுமார் 2,668 அடி உயரத்தில் ஏற்றப்பட இருக்கிறது.

Karthigai Deepam 2024: மண்சரிவு எதிரொலி! திருவண்ணாமலையில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..!

திருவண்ணாமலை மகா தீபம்

Updated On: 

11 Dec 2024 17:10 PM

கார்த்திகை மாதம் வந்தாலே திருவண்ணாமலை களைக்கட்டும். வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. அன்றைய நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றப்படும். சிவனுக்கு உரிய பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலையில் சுமார் 10 நாட்களுக்கு மேலாக தீபத் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறும் மகா தீபம், இந்தாண்டு சில நிகழ்வுகளால் மீள முடியாத துயரத்தை கொடுத்தது. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் திருவண்ணாமலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலையில் மண் சரிவு ஏற்பட்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இதன்காரணமாக, திருவண்ணாமலையில் இந்த வருடம் திட்டமிட்டபடி, மகா தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது.

ALSO READ: வெளுக்கும் கனமழை.. கொடைக்கானல், குன்னூர் போகாதீங்க.. வெதர்மேன் முக்கிய தகவல்!

பக்தர்களுக்கு அனுமதி இல்லை:

வருடந்தோறும் திருவண்ணாமலை மகா தீபத்தின்போது மலை மீது சுமார் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண் சரிவு காரணமாக, இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா அல்லது இல்லையா என்று அறநிலையைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “ திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மகா தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி கிடையாது. ஏற்கனவே, மலையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 300 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிகமானோரை மலை மீது ஏற்றக் கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமர்ப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உரிய அறிக்கை வெளியிட்டது. 350 கிலோ கொப்பரை, 450 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல தேவையான நபர்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

ALSO READ: மீண்டும் புயல் உருவாக வாய்ப்பா? சென்னையில் கனமழையா? பாலச்சந்திரன் விளக்கம்!

மலையில் தீபம் எப்போது ஏற்றப்பட இருக்கிறது..?

அண்ணாமலையார் கோயிலில் வருகின்ற டிசம்பர் 13ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, சிகர நிகழ்ச்சி என்று அழைக்கப்படும் மகா தீபம் மாலை 6 மணிக்கு சுமார் 2,668 அடி உயரத்தில் ஏற்றப்பட இருக்கிறது. அதன்படி, மகா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க இருக்கின்றனர். ஆண்டுதோறும் தீபத்தன்று 2 ஆயிரம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த முறை கோயில் நிர்வாகத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன..?

வருடத்திற்கு ஒருமுற  திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவதற்கு புராண காலத்தில் நடந்ததாக கதைகள் ஒன்று கூறப்படுகிறது. இந்து கடவுள்களில் முக்கிய கடவுளாக பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் உள்ளனர். இந்த மூன்று கடவுள்களில்  உலகை உருவாக்கும் கடவுளான பிரம்மாவிற்கும், பாதுகாக்கும் கடவுளான விஷ்ணுவிற்கும் திருவண்ணாமலையில் உள்ள மலை மீது அழிக்கும் கடவுளான சிவபெருமான் ஜோதி வடிவத்தில் காட்சியளித்ததாக கதைகள் உள்ளது. இதையடுத்து, ஆண்டுதோறும் தீபம் வடிவத்தில் விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு காட்சி தந்ததுபோல், பக்தர்களுக்கு சிவன் காட்சி தருவதாக ஒரு நம்பிக்கை. அதன்படி, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகையில் திருவண்ணாமலை மீது 350 கிலோ கொண்ட மிகப்பெரிய கொப்பறையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை காண, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை புரிந்து சிவனை தரிசிக்கின்றனர்.

திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சுமார் 4,089 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ டிப்ஸ்!
ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!
கிரிக்கெட் வரலாற்றில் யுவராஜ் சிங் படைத்த டாப் 10 சாதனைகள்..!
இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!