5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திமுக முப்பெரும் விழா.. ஒரே மேடையில் 40 எம்.பிக்கள்.. களைகட்டும் கோவை!

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, இன்று கோவை கொடிசியா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகல் கோவைக்கு சென்றடைந்தார். இந்த விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

திமுக முப்பெரும் விழா.. ஒரே மேடையில் 40 எம்.பிக்கள்.. களைகட்டும் கோவை!
முதல்வர் ஸ்டாலின்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Jun 2024 16:03 PM

திமுக முப்பெரும் விழா: மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் பிரதாண எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து, 40 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதாவது, இன்று கோவை கொடிசியா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று பிற்பகல் கோவைக்கு சென்றடைந்தார்.

Also Read: ஒரு வாரத்திற்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

ஒரே மேடையில் 40 எம்.பிக்கள்: 

இந்த விழாவில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், திமுகவின் மூத்த அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, ஆ.ராசா, சாமிநாதன் ஆகியோர் கோவையில் முகாமிட்டு உள்ளனர். இன்று நடைபெறும் விழாவில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரை கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதனால், இந்த முறை அந்த தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல், திமுகவே நேரடியாக களம் கண்டது. அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டார். மற்றொரு பக்கம் பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அண்ணாமலை போட்டியிட்டார். இப்படி மும்முனைப் போட்டி நிலவியது. களம் பாஜக பக்கமே உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறினாலும், திமுகவின் கணபதி வெற்றி வாகை சூடினார்.

அதாவது, 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களவைத் தொகுதி திமுக வசம் வந்திருக்கும் வெற்றியை பறைசாற்றும் விதமாகவும் இந்த  பொதுக்கூட்டம்பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கோவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு கோவையில் போக்குவரத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம், சித்ரா சந்திப்பு, இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

திருச்சி, கரூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் திருச்சி சாலையில் இருந்து சூலூர் y ரோடு சந்திப்பில் இருந்து சூலூர் குளம் முத்துக்ககவுண்டன்புதூர் ரயில்வே பாலம் வழியாக அவினாசி சாலை சூலூர் பிரிவு அடைந்து நீலாம்பூர், சின்னம்பாளையம், தொட்டிப்பாளைய்ம, சித்தரா சந்திப்பு மற்றும் இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடீசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

Latest News