Tamil Nadu Deputy CM: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? உதயநிதிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. புது மாற்றம் என்ன?
Udhayanidhi Stalin: முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்க செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாராத்தில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் மாற்றமா? முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்க செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாராத்தில் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். ஏற்கனவே துபாய், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளார். அடுத்த கட்டமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று திமுக வட்டாராத்தில் சொல்லப்படுகிறது. குறிப்பாக, நிதித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை, வருவாய் நிர்வாக துறைட வனத்துறை, சட்டத்துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சர்கள் மாற்றமோ அல்லது துறையில் வேறு ஒரு அமைச்சருக்கு மாற்றத் தருவதோ நடைபெறலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read: மின் இணைப்பு கட்டணம் உயர்வு.. வீடு முதல் தொழிற்சாலை வரை விலை விவரம்
துணை முதல்வராகிறாரா உதயநிதி?
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்கும் விதமான முதல்வர் ஸ்டாலின் மாத இறுதியில் அமெரிக்க செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாராத்தில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கொலை, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என சட்ட ஒழுங்கின் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வைத்து வரும் நிலையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தருவது தாமதாமாகி வரும் சூழலில், உடனடியாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பே அமைச்சரவையில் மாற்றம் செய்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தர ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று கடந்த 2009ஆம் ஆண்டு கருணாநிதி அமைச்சரவையில் ஸ்டாலின்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிடிஆருக்கு ப்ரோமோஷனா?
ஸ்டாலின் குடும்பம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானதை அடுத்து, அவர் நிதித்துறையில் இருக்கு ஐடி துறைக்கு மாற்றப்பட்டார். ஐடி துறையில் மாற்றப்பட்டத்தில் இருந்து அவர் அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இப்படியிருக்கும் சூழலில், மேற்கொள்ளக்கூடிய அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு வெயிட்டான துறையை தர இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
Also Read: தொடர்ந்து கொட்டும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?