Edappadi Palanisamy: இபிஎஸ் மீது திடீரென பறந்து வந்து விழுந்த செல்போன்.. டென்ஷனான நிர்வாகிகள்!
எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் விழுந்த போது சுற்றி இருந்த தொண்டர்களும், அதிமுக நிர்வாகிகளும் பதறிப் போயினர். ஆனால் அதனை எல்லாம் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி சிரித்த முகத்துடன் டிஜிட்டல் பதாகையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பல விஷயங்களை சுட்டிக்காட்டி பேசினார்.
அஇஅதிமுக: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு டிஜிட்டல் பதாகை திறப்பு விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் பறந்து வந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு மேள தாளங்கள் முழங்க அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலே இருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரின் கையில் இருந்து செல்போன் தவறி விழுந்ததாக நிர்வாகிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் விழுந்த போது சுற்றி இருந்த தொண்டர்களும், அதிமுக நிர்வாகிகளும் பதறிப் போயினர். ஆனால் அதனை எல்லாம் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி சிரித்த முகத்துடன் டிஜிட்டல் பதாகையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் பல விஷயங்களை சுட்டிக்காட்டி பேசினார்.
இதையும் படிங்க: Ind vs Ban, 2nd Test: 52 ஓவர்களை மட்டுமே கையில் எடுத்த ரோஹித் படை.. வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!
அதன்படி, “கடந்த காலங்களில் அதிமுக தொடர்ந்து 40 சதவீத வாக்கு வகையை தக்கவை தேர்ந்ததாகவும் ஆனால் தற்போது 10 சதவீத வாக்குகளை இழந்து இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும் அதற்கு ஏற்ப வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும் என கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுரை வழங்கினார். குறிப்பாக இளம் தலைமுறையினர் வாக்கு அதிகமாக உள்ளதால் அவர்கள் அவர்களிடத்தில் கட்சியின் செயல்பாடுகளை எடுத்து சொல்ல வேண்டும் என தெரிவித்தார். இளம் தலைமுறையினர் கையில் 40 சதவிகிதம் வாக்கு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 15 மாத காலம் உள்ளதால் நீங்கள் எந்தளவுக்கு வலிமையுடன் செயல்படுகிறீர்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என அவர் கூறினார்.
மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களையும் சேர்த்து கவரும் வகையில் பேஸ்புக், எக்ஸ் வலைத்தளம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய வலைத்தளங்களில் அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கு ஏற்ப கருத்துகளை பதிவிட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் நமது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் பதிவிட வேண்டும் என சொன்ன அவர், சமூக வலைத்தள பதவிகளை இலட்சக்கணக்கானவர்கள் பார்ப்பதால் அதை வைத்து நாம் ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: International Coffee Day 2024: காபியின் வெறித்தனமான காதலரா நீங்கள்..? அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. ஆனாலும் மாபெரும் தலைமை ஜெயலலிதா இல்லாத நிலையில் அக்கட்சி கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது பேசுபொருளாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்ந்தது. கட்சியின் பொதுச்செயலாளராக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவின் முகமாக அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவர் தரப்பினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனால் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு வழக்கில் வென்று அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டும், போராட்டம் மூலமும் மக்களிடத்தில் கவனம் ஈர்த்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தழுவி வருவது எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ச்சியாக விமர்சனமாக வைக்கப்படுகிறது.
இதனால் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை அதிமுக பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வியூகங்களை வகுத்து அதற்கு ஏற்ப செயல்பட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.