5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”பிரதமரில் சிறந்தவர் வி.பி சிங் மட்டும் தான்” தேர்தல் பரப்புரையில் சீமான் ஓபன் டாக்!

விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பழைய பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

”பிரதமரில் சிறந்தவர் வி.பி சிங் மட்டும் தான்” தேர்தல் பரப்புரையில் சீமான் ஓபன் டாக்!
intern
Tamil TV9 | Updated On: 16 Oct 2024 12:31 PM

 

விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பழைய பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு நாசமாக போய்விட்டதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு எதை பற்றியும் கவலையில்லை. எதைபற்றியும் பேசமாட்டார்கள். தொலைகாட்சிகளில் அழகி போட்டி நடத்துவதைபோல், மோடி ரோடு ஷோவை நடத்தி கொண்டிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம் தற்போதும் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. தங்களின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யக்கோரி போராடிக் கொண்டிருக்கிறார்கள். 2014ல் விவசாயிகளுக்கு அறிவித்த வாக்குறுதிகளை மோடி அரசு செய்யவில்லை.

இதனை எதிர்த்துபோராடும் அவர்கள் மீது தாக்குதல், துப்பாக்கி சூடுதான் நடக்கிறது. தேர்தல் ஆணையம் நாட்டுக்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க ஒரு லட்சம் கோடி செலவு செய்கிறது. ஆனால் தலைவருக்கு பதிலாக தரகரைதான் தேர்வு செய்யும் தேர்தலாக நடக்கிறது. கிளீன் இந்தியா திட்டத்திற்கு எத்தனைகோடி ஒதுக்கினார்கள். ஆனால் நாடு சுத்தமாகவா இருக்கிறது. தமிழகத்தில் மும்முனைபோட்டி என்று கூறுகிறார். என்னை பொறுத்தவரை அவர்கள் எல்லோரும் ஒரே அணிதான். இருமுனை போட்டி தான் நடக்கிறது. உரிமைகளை காக்க ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி தேவை. பிரதமரில் சிறந்தவர் வி.பி. சிங் மட்டும்தான்.

குஜராத்தை சேர்ந்த மோடி இரண்டு முறை பிரதமராக இருந்தார். பிரதமர் வேட்பாளர் மற்ற மாநிலங்களில் எல்லாம் தகுதி வாய்ந்த தலைவர்கள் இல்லையா?. நான் இல்லாமல் நீ வாழ முடியாது, ஆள முடியாது என்று நினைக்கிறார்கள். பிரதமர் பதவியை மாநிலங்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் மாநில மக்களின் உரிமை பாதுகாக்கப்படும், இந்தியாவும் மலரும்.

தமிழகத்தில் மழை நிவாரணமாக ரூ.37,000 கோடி கேட்டதாக மாநில அரசு சொல்கிறது. ஆனால் ஒன்றும் பெறவில்லை. மத்திய அரசுக்கென்று தனியாக வருமானம் ஏதும் கிடையாது. மாநிலங்களிலிருந்து செலுத்தப்படும் வரிதான். அதிக வருவாய் கொண்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, அடுத்தபடியாக தமிழகம், கர்நாடகா உள்ளது. தமிழகத்தில் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், மத்திய அரசு திருப்பி 28 பைசா மட்டுமே தருகிறது. ஆனால் உத்தர பிரதேசத்திற்கு 3 ரூபாய் 70 பைசா வழங்குகிறது. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது” என்றார் சீமான்.

Latest News