Monkey Pox: குரங்கு அம்மை பரவல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்.. - Tamil News | monkey pox spread in africa directorate of public health released guidelines for health officers | TV9 Tamil

Monkey Pox: குரங்கு அம்மை பரவல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்..

Mpox (monkeypox) என்பது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த குரங்குப் அம்மை வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். இதில் இரண்டு வெவ்வேறு கிளேடுகள் உள்ளன: கிளேட் I மற்றும் கிளேட் II. காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர் முனைகள் ஆகியவற்றுடன் 2-4 வாரங்கள் நீடிக்கும் தோல் சொறி அல்லது மியூகோசல் புண்கள் mpox இன் பொதுவான அறிகுறிகளாகும்.

Monkey Pox: குரங்கு அம்மை பரவல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்..

குரங்கு அம்மை

Updated On: 

16 Aug 2024 08:18 AM

குரங்கு அம்மை: குரங்கு அம்மை உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையின் படி, தமிழ்நாடு பொது சுகாதார துறை மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் படி அறிவுரை வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) 14 ஆகஸ்ட் 2024 அன்று, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என குரங்கு அம்மையை அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில், ஒரு புதிய பாலியல் பரவக்கூடிய ஸ்ட்ரெய்ன் கிளேட் Ibof the Monkeypox வைரஸின் பரவல், ஆப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அவசரநிலை என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mpox (monkeypox) என்பது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த குரங்குப் அம்மை வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். இதில் இரண்டு வெவ்வேறு கிளேடுகள் உள்ளன: கிளேட் I மற்றும் கிளேட் II. காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர் முனைகள் ஆகியவற்றுடன் 2-4 வாரங்கள் நீடிக்கும் தோல் சொறி அல்லது மியூகோசல் புண்கள் mpox இன் பொதுவான அறிகுறிகளாகும். அசுத்தமான பொருட்கள், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் இது பரவுகிறது.

தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது அல்லது குரங்கு அம்மை தடுப்பூசி இந்த நோய் பராவாமல் அல்லது வராமல் தடுக்கும். கடந்த 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்த எந்த வயது நபர்களாக இருந்தாலும் மேற்கொண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும் என பொது சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தளபதி 69 உறுதி… இயக்குநர் எச்.வினோத் கொடுத்த சூப்பர் அப்டேட்!

மேலும், இது சம்பந்தமாக, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களும் விழிப்புடன் இருக்கவும், தங்கள் அதிகார வரம்பில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வழக்குகள் இருந்தால் உடனடியாக புகாரளிக்கவும், அதே போல் அரசு மற்றும் தனியார் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு Mpox பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வழக்குகள் நிர்வாகத்திற்காக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தவிர காங்கோ அல்லது பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் நபர்களை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும், அறிகுறிகள் இருந்தால் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!