பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை… சோஷியல் மீடியா அழுத்தமா? விசாரணை தீவிரம்!
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடியிருப்பில் வசித்து வருபவர்கள் அவர்கள் பெற்றோர்கள் மீது குற்றமில்லை. இது தவறுதலாக நடந்த ஒன்று அவர்கள் பெற்றோர்கள் இதற்கு காரணம் இல்லை என தெளிவாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் ரம்யா – வெங்கடேஷ் என்ற இளம் தம்பதியினர். இவர்களுக்கு 7 மாதத்தில் கிரண்மயி என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி காலை குடியிருப்பு வளாகத்தில் 4வது மாடியில் இருந்து குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தார் ரம்யா. அப்போது, குழந்தையை கையில் பிடித்தப்படி ரம்யா சாப்பாடு கொடுத்திருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக, ரம்யாவின் பிடியில் இருந்து குழந்தை தவறி பால்கனி வழியாக கீழே விழுந்தது. 2வது மாடியில் அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது.
தகர கூரையில் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். உடனே, குழந்தையை மீட்க குடியிருப்பு வாசிகள் அனைவரும் முயற்சி செய்தனர். ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். இதனிடைய, தகர கூரையில் தொங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை மீட்க முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றப்பின் ஒன்றாக இறங்கினர். குழந்தையை பத்திரமாக மீட்டனர். பால்கனியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Also read… Dengue: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… சுகாதாரத்துறை எச்சரிக்கை!
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடியிருப்பில் வசித்து வருபவர்கள் அவர்கள் பெற்றோர்கள் மீது குற்றமில்லை. இது தவறுதலாக நடந்த ஒன்று அவர்கள் பெற்றோர்கள் இதற்கு காரணம் இல்லை என தெளிவாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. அதில் ரம்யாவை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளும் இருந்துள்ளன. இது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் தாய் ரம்யா, கோவை காரமடையில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ரம்யா காரமடையில் தற்கொலை செய்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வாகாது. மன அழுத்தம், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் அதனை மனம் விட்டு பேசி சரிசெய்ய முடியும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050