5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: சென்னையில் டிக்கெட் எடுப்பதில் தகராறு.. தள்ளிவிட்ட பயணி.. நடத்துநர் உயிரிழப்பு!

சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மக்களும் பயணிப்பதால் எப்போதும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் அனைவருக்கும் டிக்கெட் கொடுக்க வசதியாக ஸ்டேஜ் முடிப்பதற்காக ஆங்காங்கே சாலை ஓரங்களில் ஒரு சில நிமிடங்கள் பேருந்து நிறுத்தப்படுவது வழக்கம். இதனிடையே சென்னை மகாகவி பாரதியார் நகரில் இருந்து கோயம்பேட்டிற்கு 46ஜி என்ற எண்ணுடைய மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Crime: சென்னையில் டிக்கெட் எடுப்பதில் தகராறு.. தள்ளிவிட்ட பயணி.. நடத்துநர் உயிரிழப்பு!
நடத்துநர் ஜெகன்குமார்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Oct 2024 08:24 AM

சென்னையில் மாநகரப் பேருந்தில் மதுபோதையில் இருந்த பயணி தள்ளிவிட்டதில் நடத்துநர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கும், அந்தப் பேருந்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். டிக்கெட் கொடுப்பதில் தொடங்கி மீதி சில்லறை பெறுவது, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வது என பல விஷயங்களில் மோதல் இருக்கும். அதையும் தாண்டி பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதால் எப்போதும் பேருந்து ஓட்டுநர் -நடத்துநர மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு பேணப்பட்டு வருகிறது.  இப்படியான நிலையில் சென்னை மாநகர பேருந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

நேற்று மாலை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மக்களும் பயணிப்பதால் எப்போதும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் அனைவருக்கும் டிக்கெட் கொடுக்க வசதியாக ஸ்டேஜ் முடிப்பதற்காக ஆங்காங்கே சாலை ஓரங்களில் ஒரு சில நிமிடங்கள் பேருந்து நிறுத்தப்படுவது வழக்கம்.

Also Read: Traffic Diversion: வாகன ஓட்டிகளே! – சென்னை அடையாறில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

இதனிடையே சென்னை மகாகவி பாரதியார் நகரில் இருந்து கோயம்பேட்டிற்கு 46ஜி என்ற எண்ணுடைய மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பேருந்து நேற்று மாலை புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் பயணித்துள்ளார். சென்னையில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் வந்த அவர் மீண்டும் வேலூர் செல்வதற்காக கோயம்பேட்டிற்கு திரும்பி உள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் 

அவர் பயணித்த பேருந்து அண்ணா ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்தபோது ஸ்டேஜ் முடிப்பதற்காக பயணிகளுக்கு டிக்கெட் வழங்க பேருந்தை கண்டக்டர் ஜெகன் குமார் ஓரம் கட்ட சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து டிக்கெட் பெறாத பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கி வந்தார். அப்போது டிக்கெட் எடுப்பது தொடர்பாக கோவிந்தனுக்கும் ஜெகன் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரமாக டிக்கெட் பெறாமல் இருந்ததாக கூறி கோவிந்தனை ஜெகன் குமார் சத்தம் போட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தனும் பதிலுக்கு திட்ட இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களும், கோவிந்தன் குடும்பத்தினரும் இருவருக்குமிடையேயான சண்டையை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனார். ஆனாலும் ஜெகன் குமாரும், கோவிந்தனும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர்.

Also Read: School Holiday: கொட்டித்தீர்த்த கனமழை.. குமரியில் இன்று பள்ளிகள் விடுமுறை!

இருவருக்கும் சண்டை முற்றி பேருந்தை விட்டு இறங்கி ரோட்டிலும் சண்டை போட்டுள்ளனர். இதில் கோவிந்தன் பிடித்துக் தள்ளியதில் நடத்துனர் ஜெகன் குமார் கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.  இந்நிலையில் உடனடியாக சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து  வந்த அவர்கள் உடனடியாக காயமடைந்த  இருவரையும் சென்னை கீழ்ப்பாக்கம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பயணி கைது

இதில் சிகிச்சை பலனின்றி பேருந்து நடத்தினர் ஜெகன் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 52 வயதான ஜெகன்குமாருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது மறைவு போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே  காயமடைந்த பயணி கோவிந்தனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடத்துநர் உயிரிழந்த சம்பவம் மாநகரக் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் காட்டுத் தீப்போல பரவியது. இதனால் பேருந்துகளை ஆங்காங்கே இயக்காமல் நிறுத்தி  வைத்ததால் பணி முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள் அவதியடைந்தனர். இதன்பின்னர்  அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு பேருந்துகளை இயக்க ஊழியர்கள் சம்மதம் தெரிவித்தனர் இதனால் சென்னையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Latest News