5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Muharram Holiday: பள்ளி, கல்லூரி, வங்கி இன்று லீவ்.. மொஹரம் பண்டிகையொட்டி பொது விடுமுறை!

மொஹரம் பண்டிகையன்று மசூதிகளில் காலையில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டில் குடும்பத்தினருடன் சமைத்து சாப்பிட்டு அதனை பிறருக்கும் கொடுப்பார்கள். மேலும் மொஹரம் பண்டிகையன்று இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே சென்றும் பொழுதை கழிப்பார்கள்.

Muharram Holiday:  பள்ளி, கல்லூரி, வங்கி இன்று லீவ்.. மொஹரம் பண்டிகையொட்டி பொது விடுமுறை!
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Jul 2024 07:11 AM

மொஹரம் பண்டிகை: இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய முறைப்படி ஆண்டின் முதல் மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகை போலவே இதுவும் நிலவு தோன்றுவதை பொறுத்து கொண்டாடப்படுகிறது. மொஹரம் மாதத்தின் 10 நாளை இஸ்லாமியர்கள் மொஹரம் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். முகமது நபி, தீர்க்கதரிசிகளும், மற்ற தூதர்களும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. முகமது நபி மொஹரம் மாத்ததை அல்லாவின் புனித மாதம் என கூறியதாக கருத்துக்களும் உள்ளது. ஆனால் ஷியா இஸ்லாமியர்கள் இந்த கருத்தில் இருந்து மாறுபட்டு உள்ளனர்.  மொஜரம் கர்பாலாவின் தியாகிகளின் துக்கமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஷியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கருப்பு ஆடைகளை அணிந்து துக்கத்தின் மஜ்லிஸில் பங்கேற்பார்கள்.

மொஹரம் பண்டிகையன்று மசூதிகளில் காலையில் சிறப்பு தொழுகைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டில் குடும்பத்தினருடன் சமைத்து சாப்பிட்டு அதனை பிறருக்கும் கொடுப்பார்கள். மேலும் மொஹரம் பண்டிகையன்று இஸ்லாமியர்கள் குடிம்பத்தினருடன் சேர்ந்து வெளியே சென்றும் பொழுதை கழிப்பார்கள்.

Also Read: நிலவில் குகை கண்டுபிடிப்பு.. மனிதர்களை கூட அதில் தங்க வைக்கலாமாம்.. விஞ்ஞானிகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்!

அந்த வகையில் இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை இன்று (ஜூலை 17 ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி நாளை தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பொது விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ம.பி., தமிழ்நாடு, ஹைதராபாத் – ஆந்திரப் பிரதேசம், ஹைதராபாத் – தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உ.பி., வங்காளம், புது தில்லி, பாட்னா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களிலும் வங்கிகள் இன்று செயல்படாது.

வங்கிகள் மட்டுமின்றி பங்குச் சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை  முதல் பங்குச் சந்தைகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இதற்கு மாறாக வேறு ஒரு நாள் அல்ல்து வரும் சனிக்கிழமை பள்ளிகள் கால்லூரிகள் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது.. கேரளாவில் சுற்றி வளைத்த தனிப்படை..

Latest News