5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்து கோயிலுக்கு நிலம் கொடுத்த முஸ்லிம்கள்.. நெகிழ வைத்த சம்பவம்!

காலம் காலமாக மதங்களின் பெயரால் மனிதர்கள் பிரிந்து, சிறு வட்டத்துக்கு அடைந்து கிடக்கும் நிலையில், அந்த வட்டத்தை உடைத்து அனைத்து மதங்களும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில், கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசையை இஸ்லாமியர்கள் எடுத்து வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதோடு இல்லாமல்  பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கியுள்ளனர்.

இந்து கோயிலுக்கு நிலம் கொடுத்த முஸ்லிம்கள்.. நெகிழ வைத்த சம்பவம்!
இந்து கோயிலுக்கு நிலம் கொடுத்த முஸ்லிம்கள்..
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 May 2024 16:01 PM

இந்து கோயிலுக்கு நிலம் வழங்கிய இஸ்லாமியர்கள்: காலம் காலமாக மதங்களின் பெயரால் மனிதர்கள் பிரிந்து, சிறு வட்டத்துக்கு அடைந்து கிடக்கும் நிலையில், அந்த வட்டத்தை உடைத்து அனைத்து மதங்களும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில், கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசையை இஸ்லாமியர்கள் எடுத்து வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதோடு இல்லாமல்  பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கியுள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையும் ஊராட்சியில் உள்ள ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

இங்கிருக்கு இஸ்லாமியர்களுக்கு தொழுகை செய்ய பள்ளிவாசல் உள்ளது. ஆனால், இந்துக்கள் வழிபாடு செய்ய கோயில் எதுவும் அங்கு இல்லை. இதனால் அங்கிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்ட முடிவு எடுத்தும் போதுமான நிலம் இல்லாததால் கோயில் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.

Also Read: ”ஜூன் 4ல் வெற்றியை கொண்டாடத் தயாராகுங்கள்” அண்ணாமலை பேச்சு!

இதனால் அப்பகுதி இஸ்லாமியர்கள் ஆர்எம்ஜே ரோஸ் கார்டன் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கியுள்ளது. இந்த இடத்தை தானமாக வழங்கியதை அடுத்து கோயில் கட்டும் பணிகளும் நடந்தது. இறுதியில் அனைத்து பணிகளும்  முடிந்த நிலையில், நேற்று அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இஸ்லாமியர்கள் சீர்வரிசை:


அப்போது, இஸ்லாமியர்கள் ஊர்லவமாக சீர்வரிசை எடுத்து கோயிலுக்கு சென்றனர். பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோயிலுக்கு வழங்கினர்.  இதில், இரு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பெரியவர்களுடன் கலந்துகொண்டனர். சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். மேலும் கோயில் விழாவில் அன்னதானம் செய்யவும் இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அன்னதானமும் வழங்கப்பட்டது. சாதி, மதம் என இன பாகுபாடுகள் மூலம் பிரிந்து கிடக்கும் சூழலில் அனைவரும் சமம் என சமத்துவத்தையும், சகோதரத்துவதையும் உணத்தும் விதமாக இஸ்லாமியர்கள் தங்கள் நிலத்தை தானமாக வழங்கியுள்ளதோடு, கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை எடுத்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Also Read: வெயில் கொளுத்தும்.. அதுவும் 100 டிகிரி.. அடுத்த 5 நாட்களுக்கு வானிலை மையம் அலர்ட்!!

Latest News