5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“அதிமுக முடிந்துவிடவில்லை… என்னுடைய என்ட்ரி தொடங்கிவிட்டது” சசிகலா பரபர பேட்டி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 40 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்தோம். இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக ஒரு சில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்று கொண்டேன். எனக்கென்று சொந்த ஊர், சொந்த சாதி இல்லை. அதிமுகவில் சாதி அரசியலும், வாரிசு அரசியலும் கிடையாது" என்றார்.

“அதிமுக முடிந்துவிடவில்லை… என்னுடைய என்ட்ரி தொடங்கிவிட்டது” சசிகலா பரபர பேட்டி!
சசிகலா
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 Jun 2024 21:00 PM

“அதிமுக முடிந்துவிடவில்லை” நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்ற நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 40 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதாவும் நானும் பல இன்னல்களை சந்தித்து மிகப்பெரிய இயக்கமாக அதிமுகவை கட்டமைத்தோம். இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக ஒரு சில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்று கொண்டேன். எனக்கென்று சொந்த ஊர், சொந்த சாதி இல்லை. அதிமுகவில் சாதி அரசியலும், வாரிசு அரசியலும் கிடையாது.

ஆனால் தற்போது அதிமுகவில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்கின்றனர். அவர்கள் தனியாக சாதி இயக்கத்தை உருவாக்கி சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் அதிமுகவில் இருந்து அப்படி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. சாதி அரசியல் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பேனா? இன்றைக்கு நிலைமை என்ன? அதிமுக 3வது மற்றும் 4வது இடத்திற்கு சென்றுள்ளது. அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு. அதனால், தானும் கெட்டு கட்சியையும் கெடுக்க வேண்டாம்.

Also Read: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

“என்னுடைய என்ட்ரி தொடங்கிவிட்டது”

அதிமுகவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. நான் இத்தனை நாள் சொன்னது வேறு. நான் சொல்லி வந்த நேரம் இதுதான். தமிழக மக்கள் அதிமுக பக்கம் இருப்பார்கள். 2026ஆம் ஆண்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். முக்கியமான நேரத்தில் தான் குரல் கொடுப்பேன். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளேன் திமுகவின் பிடியில் இருந்து தமிழக மக்களை காக்க அதிமுக ஆட்சி வந்தே ஆக வேண்டும். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்து இருப்பது தவறானது. அதிமுக முடிந்துவிட்டது என யாரும் நினைக்க வேண்டாம்.

ஏனென்றால் என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது. கொடாநாடு வழக்கை தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுகிறார்கள். கொடாநாடு விசாரணையை ஏன் இவ்வளவு பொறுமையாக நடத்த வேண்டும். திமுக அரசால் கொடாநாடு விசாரணைகூட வேகமாக நடத்த முடியவில்லை. விசாரணை நடத்தி யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இதற்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்” என்றார்.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. புறக்கணிக்கும் தேமுதிக.. இபிஎஸ் வழியில் பிரேமலதா!

Latest News