Seeman Rajinikanth: திடீரென ரஜினியை நேரில் சந்தித்த சீமான்.. பின்னணி என்ன?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இப்போதில் இருந்தே கூட்டணி குறித்து சலசலப்புகள் இருந்து வருகிறது.
திடீரென ரஜினியை நேரில் சந்தித்த சீமான்
திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் சூழலில், மறுபுறம் அதிமுக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதோடு, தமிழக அரசியல் களத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யும் குதித்துள்ளார்.
இதனால் தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக இருக்கிறது. இதற்கிடையில், தற்போது தமிழக அரசியலில் புயலை கிளப்பும் வகையில் முக்கிய சந்திப்பு நடந்துள்ளது. அதாவது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதாகவும், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அரசியலில் இருந்து விலகுவதகா அறிவித்த ரஜினி, அடுத்தடுத்த பல படங்களில் கமிண்ட் ஆகினார்.
Also Read : சோறு சாப்ட்டியா? க்யூட்டாக பதில் சொன்ன திருச்செந்தூர் தெய்வானை.. வாவ் வீடியோ!
திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன?
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது அதை கடுமையாக எதிர்த்து பேசியவர் சீமான். மேலும், அவரை கடுமையாகவும் விமர்சித்தார் சீமான். தமிழ்நாட்டை ஒரு தமிழனே ஆளு வேண்டும், தமிழினத்தின் வரலாறு தெரியாதவர் எதற்கான எங்களை ஆள வேண்டும் என்றும் தமிழர் அல்லாதவர் இங்கு தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரக் கூடாது என்று எதிர்க்குரல் எழுப்பினார் சீமான்.
இதனால் இருதரப்பினரிடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியினரும், ரஜினி ரசிகர்களும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்து கொண்டனர். இப்படியாக இவர்களது உறவுகள் இருந்த சூழலில், ரஜினியை சீமான் சந்தித்து பேசி உள்ளார்.
இதற்கிடையில், வேட்டையன் படத்தில் ரஜினியின் நடிப்பு குறித்து சீமான் அண்மையில் பாராட்டுகள் தெரிவித்தார். ரஜினிகாந்திற்காகவே அமைக்கப்பட்ட இசை, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொன்றிலும் தம்முடைய கவர்ந்திழுக்கும் நடிப்பாற்றல் மூலம் ஆரம்பகால ரஜினியாக நம் மனதை ஆட்கொள்கிறார் என்று சீமான் கூறியிருந்தார்.
விஜய்க்கு எதிராக காய் நகர்த்தும் சீமான்?
இதனால் சீமானை தொடர்பு கொண்டு ரஜினி நன்றி தெரிவித்ததோடு, நேரில் பேசவும் அழைப்பு விடுத்திருக்கிறார். சீமானின் பிறந்தநாள் அன்றே ரஜினி சந்திக்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால், சில காரணங்களுக்கான அன்று சந்திப்பு நடைபெறவில்லை.
இந்த சூழலில் தான் ரஜினியை அவரது இல்லத்திற்கே சென்று நேற்று சந்தித்தார் சீமான். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : 50 ஆண்டுகளாக மக்கள் சேவை.. ஆலங்குடி ‘515’ கணேசனின் கதை!
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது, விஜய்க்கு எதிரான ஆதரவை சீமானை திரட்டுவதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு முன்பு விஜய்யை அரவணைத்து பேசி வந்த சீமான், மாநாட்டிற்கு பிறகு விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த சூழலில் தான் விஜய்க்கு சினிமா களத்தில் போட்டியாளாராக இருக்கு ரஜினியை சீமான் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு தற்போதைய அரசியலில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இந்த சந்திப்பு விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்களை தனது பக்கம் இழுக்க சீமான் செய்வதாக விமர்சனங்கள எழுந்துள்ளன. இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து சீமான் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.