NTK Seeman: கட்சி விதிகளுக்கு கட்டுப்படாவிட்டால் செல்லலாம்.. சீமான் அதிரடி அறிவிப்பு!

Naam Tamilar Katchi: சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது. மாணவனின் பார்வையில் ஆசிரியர் சர்வாதிகாரியாக தெரிவார். ஆனால் ஆசிரியரின் பார்வையில் பார்த்தால் அது மாணவனின் நலனுக்காக தான் இருக்கும். சர்வாதிகாரம் இல்லாமல் சிறந்த ஆட்சியாளராக இருக்க முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையற்றதாக இருக்கும்.

NTK Seeman: கட்சி விதிகளுக்கு கட்டுப்படாவிட்டால் செல்லலாம்.. சீமான் அதிரடி அறிவிப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

15 Nov 2024 08:13 AM

நாம் தமிழர் கட்சி: கட்சியின் விதிகளுக்கு கட்டுப்படாவிட்டால் யாராக இருந்தாலும் வெளியே செல்லலாம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் நேற்று சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என மக்களிடம் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “மாஞ்சோலை பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்திக்க அனுமதி கேட்டால், அதனைக் கொடுக்க அரசு மறுக்கிறது” என குற்றம் சாட்டினார்.

டிசம்பர் முதல் போராட்டம் 

மாஞ்சோலை பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றினால் கூட எங்களுக்கு இடம் வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கடைசி கோரிக்கையாக உள்ளது. மேலும் மாஞ்சோலை பகுதிகளிலேயே தங்களுக்கு வாழ்விடமும், வாழ்வாதாரமும் தேவை என்பது அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண மண் மற்றும் மக்களை பேரன்பு கொண்டு காதலிக்கும் ஒருவனிடம் ஆட்சி அதிகாரம் வந்தால் மட்டுமே கிடைக்கும். மாஞ்சோலை பகுதி மக்களின் உரிமையை நிலை நாட்டும் வகையில் டிசம்பர் மாதம் முதல் நாம் தமிழர் கட்சி  போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்” என சீமான் தெரிவித்தார்.

Also Read: CM Stalin: தொடரும் கள ஆய்வு.. அரியலூர், பெரம்பலூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!

கட்சியில் இடமில்லை

இதனை தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சர்வாதிகாரம் இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரி செய்ய முடியாது. மாணவனின் பார்வையில் ஆசிரியர் சர்வாதிகாரியாக தெரிவார். ஆனால் ஆசிரியரின் பார்வையில் பார்த்தால் அது மாணவனின் நலனுக்காக தான் இருக்கும். சர்வாதிகாரம் இல்லாமல் சிறந்த ஆட்சியாளராக இருக்க முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையற்றதாக இருக்கும். இது உலகம் முழுவதும் உள்ள நியதி தான். ஆகவே கட்சி விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை.

நான்  சர்வாதிகாரியாக இருக்கேன் என்றால் போய் விடுங்கள். நேரு காமராஜர் போன்றவர் அன்பான சர்வாதிகாரியாக தான் இருந்திருக்கிறார்கள். கட்சி என்றால் ஒரு விதி மற்றும் முறை உள்ளது. எந்த ஒரு இயக்கமும் ஒழுங்காக இயங்குவதற்கு ஒழுங்கியல் என்ற ஒன்று உள்ளது. ஏனென்றால் இது வெகு தூர பயணம். சர்வாதிகாரம் இல்லாத இடத்தில் போய் இருங்கள். கட்சியிலிருந்து விலகுவது என்பது கட்சி சார்ந்த பிரச்சனை. மக்களின் பிரச்சினை மட்டும் கேளுங்கள் என செய்தியாளர்களிடம் சீமான் கோபப்பட்டார்.

Also Read: மருத்துவருக்கு நடந்த கொடூரம்.. தமிழக டிஜிபி போட்ட முக்கிய உத்தரவு!

சீமான் மீது குற்றச்சாட்டு

முன்னதாக நெல்லை மாவட்டம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்க முயன்ற சில நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறினர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி செயலாளர் பர்வீன், “நான் கடந்து 8 வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் இருக்கிறேன். ஏழு வருடங்களாக பொறுப்பில் இருந்து வரும் வரை கட்சிக்காக எவ்வளவு உழைத்து உள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். சீமான் பேசி முடித்ததும் கேள்வி எழுப்ப எழுந்தபோது நீ யார்?, உனக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? என்று என்னைப் பார்த்து கேட்டார். இருப்பது என்றால் இது இல்லாவிட்டால் வெளியே போடா.  இது என் கட்சி” என்று கூறியதாக பர்வீன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் அனைத்து விலகி வருகின்றனர். பலரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக விஜய்யின் அரசியலை முதலில் பாராட்டிய சீமான் பின்னர் அவரை தாறுமாறாக விமர்சிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா?
3 வேளை சாதம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?
கரும்பு சாறு குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!
தேங்காய் பால் கூந்தலுக்கு ஏன் வரப்பிரசாதம் தெரியுமா..?