Seeman: சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? யோசிக்காமல் சட்டென சொன்ன சீமான்! - Tamil News | Naam Tamilar Katchi leader Seeman says no tie up with Vijay Tamilaga vettri kazhagam in 2026 assembly election tamilnadu | TV9 Tamil

Seeman: சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? யோசிக்காமல் சட்டென சொன்ன சீமான்!

வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக கூறி உள்ளார். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். விரைவில் மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

Seeman: சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? யோசிக்காமல் சட்டென சொன்ன சீமான்!

சீமான் -- விஜய்

Updated On: 

16 Oct 2024 12:30 PM

விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை: வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக கூறி உள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக கூறி உள்தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். விரைவில் மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நீங்கள் வேண்டுமானால் கட்சியில் சேருங்கள். உங்களுக்கும் ஒரு சீட் தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் விஜய்யோடு இணைந்து தேர்தலில் களம் இறங்க சீமான் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது சீமான் அதற்கு திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார்.

Also Read: வரதட்சணைக்காக காஃபியில் விஷம்.. இளம்பெண்ணை கொன்ற கணவன் குடும்பம்.. திடுக் வாக்குமூலம்!

சீமான் திட்டவட்டம்: 

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகரான விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியபோதே 2026 தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். இதற்காக தமிழக வெற்றிக் கழக கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அண்மையில் கூட தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிக் கொடி மற்றும் கட்சிப் பாடல் வெளியானது.

தமிழகத்தில் ஏற்கனவே திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனைப்போட்டி நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், விஜய்யின் அரசியல் நுழைவு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. விஜய் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சிமான் கூட்டணி வைக்கப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டது.  ஆனால் தற்போது சீமான் விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிடுவதாக திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் கடைசியில் மாநாடு நடத்த திட்டமிட்டு, மாநாட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பை தனது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் ஒப்படைத்து இருந்தார்.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு பிச்சு உதறபோகுது மழை… எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

இதனால், கடந்த 3 மாதமாக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் மதுரை, திருச்சி பகுதிகளில் இடம் தேடி வந்ததாக தெரிகிறது. மாநாட்டை நடந்த அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் சூர்யா கல்லூரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு த.வெ.க சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் அதில் தொடர் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!