5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Maanadu: “தம்பி விஜய்க்கு பெருங்கனவு” த.வெ.க மாநாட்டுக்கு சீமான் வாழ்த்து!

சீமான்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TVK Maanadu: “தம்பி விஜய்க்கு பெருங்கனவு” த.வெ.க மாநாட்டுக்கு சீமான் வாழ்த்து!
விஜய் – சீமான்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Oct 2024 18:29 PM

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. விஜய் கட்சி தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு மாநாடு துவங்குகிறது. இந்த மாநாட்டிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு சீமான் வாழ்த்து:

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் சீமான் பதிவிட்டுள்ளதாவது, ” அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும். தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக,  விசிக தலைவர் தொல். திருமாவளவன், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஷால் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை தனது இலக்காக வைத்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து தமிழக அரசியில் பல விஷயங்கள் பேசப்பட்டன.

Also Read: த.வெ.க மாநாட்டில் ரோடு ஷோ நடத்தப்போகிறாரா விஜய்? காவல்துறை முக்கிய தகவல்!

குறிப்பாக, சீமான் விஜய்யுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலை எதிர்கொள்வார் என பேசப்பட்டது. ஆனால், விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிடுவதாக சீமான் அண்மையில் கூறினார்.  இப்படியான சூழலில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று இரவு விழுப்புரம் செல்லும் விஜய்?

விஜய் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு எப்போது புறப்பட்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. இவர் இன்று நள்ளிரவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் நாளை காலை அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை தவிர்ப்பதற்காகவே இத்தகையை நடவடிக்கை அவர் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் அவர் தங்குவதற்கு வசதியாக அங்கு 6 கேரவண்கன் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வசதிகளுடன் கூடிய விஐபி அறை ஒன்றும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

மாநாட்டிற்கான ஏற்பாடுகள் என்னென்ன?

மாநாட்டிற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குடிநீர், கழிவறை, இருக்கை, பார்க்கிங், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Also Read: திருப்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..

மாநாடுக்கு வரும் தொண்டர்களுக்கு 3 லட்சம் வாட்டர் பாட்டில் நேற்று வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிஸ்கட் பாக்கெட்டுகள், மிக்சர் என வரவழைத்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு சாப்பாடு வழங்கு அங்கிருக்கும் ஹோட்டலில் ஆர்டர் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், மாநாடு வருபவர்களுக்கு உணவு, தண்ணீர் சரியாக வழங்கப்படுவதற்காக 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Latest News