Seeman On TVK Party: “அண்ணன் என்ன.. தம்பி என்ன? எதிரி எதிரிதான்” மீண்டும் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்! - Tamil News | Naam Tamilar leader Seeman launches fresh attacks at TVK Vijay over adopting dravidian ideology | TV9 Tamil

Seeman On TVK Party: “அண்ணன் என்ன.. தம்பி என்ன? எதிரி எதிரிதான்” மீண்டும் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக எனும் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். இந்த மாநாட்டில் தமிழக இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அதிரடியாக அறிவித்தார்.

Seeman On TVK Party: அண்ணன் என்ன.. தம்பி என்ன? எதிரி எதிரிதான்” மீண்டும் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!

விஜய் - சீமான் (picture credit ; PTI)

Updated On: 

02 Nov 2024 15:58 PM

அண்ணன், தம்பி உறவு வேறு. கொள்கை வேறு. தாய் தந்தையராகவே இருந்தாலும் எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரி தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். இந்த மாநாட்டில் தமிழக இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அதிரடியாக அறிவித்தார்.

“அண்ணன் என்ன.. தம்பி என்ன?”

மேலும், பாஜகவை தனது கொள்கை ரீதியாக எதிரி என்றும், திமுகவை அரசியல் ரீதியாக எதிரி என்றும் பெயர் குறிப்பிடாமல் அறிவித்தார். இதனை தொடர்ந்து பாஜக மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், பிற கட்சியில் உள்ள அனைவரும் விஜய்யை சரமாரியாக விமர்சித்தனர்.

நேற்று கூட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் கொள்கைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், இன்றும் சரமாரியாக விமர்சித்துள்ளார் சீமான்.

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “விஜய்யின் கொள்கையே தவறாக உள்ளது. திராவிடமும், தமிழ்த் தேசியமும் தேவை என்று கூறுவது தவறாக உள்ளது. திராவிடத்தை வாழ வைப்பதற்கு எதற்கு கட்சி? அதற்கு தான் திமுக இருக்கே? அப்புறம் ஏன் நீங்கள்?

Also Read : ஒரே நிகழ்ச்சியில் திருமா – விஜய் ? எங்கே ? எப்போது? அரசியலில் நடக்கப்போகும் புது ட்விஸ்ட்.. ..

விஜய்யை கடுமையாக சாடிய சீமான்:

மஞ்சள் கொடியை வெச்சு கோவில்ல கும்பிடவா போறீங்க. திராவிடமும் தமிழ்த் தேசியமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? விஷமும் விஷத்தை குறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாகும்?  தம்பி வேற.. உறவு வேற.. கொள்கையில் முரண் வேறு.

என்னை பொறுத்தவரை தாய் தந்தையராகவே இருந்தாலும் எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரி தான். கடவுளாக இருந்தாலும் கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி தான். இதில் அண்ணன், தம்பி என்ற உறவு எதுவும் இல்லை.

நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்திற்கு இதயத்துடிப்பில் வாழ்பவர்கள் அல்ல. லட்சியத்துடிப்பில் வாழ்பவர்கள்.  ரத்த உறவை விட லட்சிய உறவு தான் மேலானது. கொள்கை என்று  வந்துவிட்டால் பகை தான் கூட்டம் என்பது கூடும்.

சினிமா ஸ்டார்களுக்கு கூட்டம் கூடும். விஜய்காந்துக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியது? மதச்சார்பற்ற சமூக நீதி எப்படி? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, EWS 10 சதவீதம், அருந்ததியருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு இதை ஏற்கிறீர்களா? எதிர்கிறீர்களா? திமுகவும் தான் சமூக நீதி பற்றி பேச்சிக் கொண்டே இருக்கிறது.

Also Read : தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களே..! இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

“பாஜகவிற்கு, காங்கிரஸ்க்கு எந்த வேறுபாடும் இல்லை”

என்ன செய்தது? தமிழக அமைச்சரவையில் எத்தனை பெண் அமைச்சர்கள்? ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்கிறார்கள். இதுதான் சமமா? ஆணும், பெண்ணும் சமம் என்பது தான் தமிழ்த் தேசிய கொள்கை. மதுகடைகளை மூடச் சொல்வது தமிழ்த்தேசியம்.

தெருவுக்கு இரண்டு மதுகடைகளை திறப்பது தான் திராவிடம். எனவே, இரண்டையும், ஒன்றும் என்றும் கூறுவது எப்படி ஏற்க முடியும்? காங்கிரஸை எப்படி பார்க்கிறீர்கள்? ஜிஎஸ்டி, நீட் போன்றவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். பாஜக மதவாதம், காங்கிரஸ் மிதவாதமா? ஆர்எஸ், பாஜக பாபர் மசூதியை இடிப்பார்கள். அதற்கு காங்கிரஸ் இடிக்க அனுமதிப்பார்கள்.

எதில் என்ன வேறுபாடு. அதேபோல, அதிமுக தலைமை ஊழலுக்காக சிறை வென்றதை மறந்துவிடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக அதிமுகவை மட்டும் ஏன் விஜய் விமர்சிக்கவில்லை. எந்த விதத்தில் நீங்கள் அதிமுகவை புனிதப்படுத்துறீர்கள்? காங்கிரஸ், அதிமுக உங்கள் எதிரி இல்லைனா? பாஜகவிற்கு, காங்கிரஸ்க்கு எந்த வேறுபாடும் இல்லை ” என்று கூறியுள்ளார்.

வெறும் வயிற்றில் வேப்ப இலைகள் சாப்பிடலாமா?
தினமும் பூசணி விதை சாப்பிட்டால் என்னாகும்?
தேன் சுவைக்கு மட்டுமல்ல.. உடலுக்கும் பல நன்மைகளை தரும்..!
பல விதங்களில் உடலுக்கு நன்மை தரும் பாகற்காய்..!