5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மக்களவைத் தேர்தலில் கெத்து காட்டிய சீமான்.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற நாதக!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக, பாஜக கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சியும் தோல்வியை சந்தித்தது. ஆனால், கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. அதே நேரம் அதிமுகவும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது, நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கெத்து காட்டிய சீமான்.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்ற நாதக!
சீமான்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Oct 2024 12:31 PM

நாம் தமிழர் கட்சி: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றிய நிலையில், தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக மட்டும் 240 தொகுதிகளை தன் வசப்படுத்தியது. அதேபோல, I.N.D.I.A கூட்டணி 235 இடங்களில் தன் வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக, பாஜக கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சியும் தோல்வியை சந்தித்தது. ஆனால், கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது.

Also Read: 40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி.. மக்களவைத் தேர்தல் முழு விவரம்!

தேர்தல் ஆணையத்திடன் அங்கீகாரம் பெற்ற நாதக:

அதே நேரம் அதிமுகவும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது, நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்த முறை 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 6 தொகுதிகளில் 3 இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், 12 மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6 தொகுதிகளில் 3ஆம் இடத்தை பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகை, ஈரோடு, திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. கன்னியாகுமரியில் 52,677 வாக்குகளும், கள்ளிக்குறிச்சியில் 73,652 வாக்குகளும், திருச்சியில் 1,07,458 வாக்குகளும், புதுச்சேரியில் 38,938 வாக்குகளும், ஈரோடில் 80,255 வாக்குகளும், நாகையில் 1,31,294 வாக்குகளும் நாதக பெற்றிருக்கிறது.  இதில் 2 இடங்களில் அதிமுகவையும், 2 இடங்களில் தாமகாவையும், தலா ஒரு இடத்தில் பாஜகவையும் பின்னுக்கு தள்ளி 3ஆம் இடத்தை பிடித்தது. மற்ற 33 மக்களவைத் தொகுதிகளிலும் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: பிரதமர் வேட்பாளர் யார்? ஒன்றுகூடும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.. டெல்லியில் பரபர!

Latest News