Seeman on Vijay: ”தம்பி நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை” – விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்..
நேற்றைய நிகழ்ச்சியில் விஜய்யை விமர்ச்சித்த சீமான், “ சாலையில் ஒன்று அந்த பக்கம் நில்லு, இல்ல இந்த பக்கம் நில்லு, நடுவில் நின்றால் லாரி அடித்து செத்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிக கொடுநிலை. இது கொள்கை இல்லை கூமூட்டை. இது சினிமா பஞ்ச் டயலாக் இல்ல தம்பி,நெஞ்சு டயலாக் இது. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது த.வெ.க கட்சி மாநாட்டில் தலைவர் விஜய் பேசியது குறித்தும் கட்சி கொள்கை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக் விஜய் பேசிய பாணியில் அவரும் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”தமிழ்நாடு உருவாக முக்கிய பங்காற்றிய சங்கரலிங்கனாரை திராவிட மாடல் அரசு போற்றாதது ஏன்? சங்கரலிங்கனாரை பற்றி பேசாதது ஏன் ? இன்னும் 5 ஆண்டுகள் திமுகவிடம் ஆட்சியை கொடுத்தால் எல்லா இடங்களிலும் கருணாநிதி பெயரை வைத்துவிடுவார்கள். தமிழகத்தில் கழிப்பிடம், குடிப்பிடம் இந்த இரண்டிற்கும் தான் கருணாநிதி பெயர் வைக்கவில்லை. கருணாநிதி பெயர் வைக்க சரியான இடம் குடிப்பிடம் தான்” என பேசியுள்ளார்.
பின்னர் விஜய்யை மறைமுகமாக விமர்சிக்க தொடங்கிய சீமான் ” தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல. வரலாற்றை கற்பிக்க வந்தவன். இது பண்பாட்டு புரட்சி தம்பி. என் மூதாதையர் முப்பாட்டனின் தோளில் இருந்த பணப்பையை அறுத்து கொண்டு ஓடி விட்டாய். இந்த தலைமுறை பேரனும், பேத்தியும் விரட்டி அடித்து பறிக்கிறோம். நீங்கள் இனிமேல்தான் பெரியார் அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பி.எச்.டி வாங்கி விட்டோம்.
நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேட வேண்டும். சங்க இலக்கியத்தில் வருகிற தலையங்கானத்து பாண்டிய நெடுஞ்செழிய மன்னனின் பேரனும் பேத்தியும் நாங்கள். அது கதையல்ல, எங்கள் இனத்தின் வரலாறு.
எதிர்ப் புரட்சி முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு. அன்பு என்றால் அன்பு, பேரன்பு. வம்பு என்றால் வம்பு. நீங்கள் வெட்ட அருவாளை ஓங்கினால் விழுந்து கும்பிட மாட்டோம். வெட்ட நினைக்கும் போதே வெட்டிவிடுவோம்.
மேலும் படிக்க: ஒரு நாளைக்கு இரண்டு ஏலக்காய் சாப்பிடுங்க! உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்..!
விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்:
சாலையில் ஒன்று அந்த பக்கம் நில்லு, இல்ல இந்த பக்கம் நில்லு, நடுவில் நின்றால் லாரி அடித்து செத்து விடுவாய். இது நடுநிலை இல்லை மிக கொடுநிலை. இது கொள்கை இல்லை கூமூட்டை. இது சினிமா பஞ்ச் டயலாக் இல்ல தம்பி,நெஞ்சு டயலாக் இது. எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.
ஒரு கட்சி உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்று 9 தேர்தல்களில் தோல்வியை சந்தித்தும். 10 வது முறையும், தனித்து போட்டியிடுகிறது என்றால் உலகத்தில் ஒரே கட்சி அது பிரபாகரனின் பிள்ளை கட்சி நாம் தமிழர் தான். திராவிடம் எங்களுக்கு நேர் எதிரானது.
வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. சத்தமாகப் பேசும் நான் வரவில்லை என்றால் வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன், அஞ்சலை, சேர சோழ பாண்டியர் யார் என்று தெரியாது. நீங்க வைத்துள்ள கட்டவுட்டுகள் எல்லாம் நான் வரையவைத்த படங்கள்.
மேலும் படிக்க: கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..
தீரன் சின்னமலையை சங்க இலக்கியத்தில் படிக்கக் கூடாது தம்பி. இப்போதுள்ள வரலாற்றில் படிக்க வேண்டும். அவன் மன்னன் இல்லை. விவசாயக் குடும்பத்தில் பிறந்த எளிய மகன். திப்பு சுல்தானின் படையை விரட்டி அடித்தவன்.
ப்ரோ இது வெறும் ட்ரைலர் தான்:
ப்ரொ இது ட்ரைலர் தான் ப்ரொ,மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். ஆவின் பாலுடன், கருப்பட்டி பால் கொடுக்கப்படும் என்ற கொள்கையை நான் கேட்டது கிடையாது. ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லிருந்தால் பரவாயில்லை கருப்பட்டிக்கு எப்படி பால் வரும்.
முட்டு சந்தில் நின்று கத்தி விட்டு போகிறவன் நான் என்று நினைத்து விடாதே தம்பி. நான் கருணாநிதி மகனோ, கருணாநிதி பேரனோ கிடையாது. நான் பிரபாகரனின் மகன். மகத்தான மாபெரும் தலைவனின் வாரிசு நான். 2026 ல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது” என பேசியுள்ளார்.