TN Goverment: தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. அரசு தரும் மாதம் ரூ.5,000… தகுதிகள் என்ன?

Naan Mudhalvan Scheme : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் மேற்படிப்பை பொருளாதார தடையின்றி தொடர்ந்து வருகின்றனர். மேலும், கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

TN Goverment: தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. அரசு தரும் மாதம் ரூ.5,000... தகுதிகள் என்ன?

நான் முதல்வன் திட்டம்

Updated On: 

09 Nov 2024 15:17 PM

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் மேற்படிப்பை பொருளாதார தடையின்றி தொடர்ந்து வருகின்றனர். மேலும், கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் நான் முதல்வன் திட்டம். இந்த திட்டம் மூலம் வேலையின்றி இருக்கும் இளைஞர்கள் பலரும் பயன் அடைந்துள்ளனர். வெளிநாட்டிலும் தமிழர்கள் வேலை செய்ய ஏதுவாக அதற்கு பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

தமிழக இளைஞர்களூக்கு சூப்பர் சான்ஸ்

அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் வேலை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மூலம் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலை தேடும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஒரு கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் நடத்தப்படுகிறது.

இந்தித திட்டத்தின் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாதம் இன்டர்ன்ஷிப் இருக்கும். இளைஞர்கள் ஆர்வத்தை பொறுத்து, எந்த துறையில் விரும்புகிறீர்களோ, அந்த துறையி 5 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை தேர்வு செய்யலாம்.

Also Read : சிஏ படிப்பவரா? அரசு தரும் இலவச பயிற்சி.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

என்னென்ன தகுதிகள்?

இன்டர்ன்ஷிப் பயிற்சியின்போது மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசின நான் முதல்வன் திட்டத்தின் இணையதளம் https://naanmudhalvan.tn.gov.in/ மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க QR Code-ஐ ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு https://pminternship.mca.gov.in/ என்ற இணையதளம் மூலமும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதில் முகப்பு பக்கத்தில் Login என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளீட்டு லாக்கின் செய்து கொள்ள வேண்டும். பின்னர், உங்கள் சுய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து, உங்களுக்கான இன்டர்ன்ஷிப் விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.

Also Read : குரூப் 2 தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்.. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேவையான ஆவணங்கள்:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நபர்கள் கல்விச் சான்றிதழ்கள்,
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?
புரதத்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
... இதுதான் அதுக்கு காரணம் - ஐஸ்வர்ய லட்சுமி