Namakkal Crime News : லாரிக்குள் இருந்த கார்.. கட்டுக்கட்டாக பணம்.. கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்.. பரபர சம்பவம்!

Robbery | கேரளாவில் இருந்து வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, நாமக்கலில் நின்றுக்கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், லாரியை விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது லாரியில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல், கற்களை வீசி போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Namakkal Crime News : லாரிக்குள் இருந்த கார்.. கட்டுக்கட்டாக பணம்.. கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்.. பரபர சம்பவம்!

லாரியில் கடத்தப்பட்ட பணம்

Published: 

27 Sep 2024 14:08 PM

நாமக்கலில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிர்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை போலீசார் விரட்டிச் சென்ற போது, குற்றவாளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் தற்காப்புக்காக மறு  தாக்குதலில் நடத்தியல் ஒருவர் சுட்டுக் கொல்லை செய்யப்பட்டுள்ளார். மேலும் மடக்கி பிடிக்கப்பட்ட அந்த லாரியில் இருந்து கட்டு கடடாக பணமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த கண்டெய்னர் லாரியில் இருந்த பணம் யாருடையது, எங்கிருந்து பணம் கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Amazon & Flipkart Sale : ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை.. அதிரடி சலுகைகளை வாரி வழங்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்!

விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி – சுட்டு பிடித்த போலீஸ்

கேரளாவில் இருந்து வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, நாமக்கலில் நின்றுக்கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், லாரியை விரட்டிச் சென்றுள்ளனர். அப்போது லாரியில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல், கற்களை வீசி போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக போலீசார் எதிர் தாக்குதல் நடத்திய நிலையில், ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்த மற்றவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Watch Video: அனைத்து விதமான கிரிக்கெட்டில் ஓய்வு.. சக வீரர் அளித்த கௌரவத்துடன் அழுதுகொண்ட வெளியேறிய பிராவோ!

கன்டெய்னர் லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பணம்

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியில் சுமார் ரூ.50 லட்சம் ரொக்க பணம், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும்னறி குற்ற சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த லாரி ராஜந்தானை சேர்ந்தது என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தீவிர விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமக்கலில் கைது செய்யப்பட்ட இந்த கும்பல் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஏடிஎம்-ல் இருந்து நேற்று சுமார் ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துள்ளது. அதுமட்டுமன்றி அந்த கும்பல் கேரள மாநிலத்தில் 3 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்துள்ளது. இந்த நிலையில் கொள்ளையடித்த பணத்தை ராஸ்தானுக்கு கடத்தில் செல்லும் வழியில் போலீசார் இந்த கும்பலை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டுள்ளது. சினிமா பாணியில் கொள்ளையடித்த பணத்தை பட்ட பகலில் கடத்தி செல்ல முயனற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!