5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!

கடந்த 15 நாட்களுக்கு மேலாக நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதனால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.  தற்போது விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்!
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 11:13 AM

சிபிசிஐடிக்கு மாற்றம்: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4ஆம் தேதி ஜெயக்குமார் தோட்டத்தில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதனால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.  தற்போது விசாரணை நடத்தி வரும் போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வழக்கு:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 2ஆம் தேதி காணாமல் போனார். இதனை அடுத்து, 3ஆம் தேதி உவரி காவல்நிலையத்தில் அவரது மகன் புகார் அளித்தார். ஆனால், மே 4ஆம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல், வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்திலேயே எரிந்த நிலையில் காணப்பட்டது.

Also Read: சென்னையில் அடுத்த பிரம்மாண்டம்.. சூப்பராக வரப்போகும் பிராட்வே பஸ் நிலையம்!

அவரது கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்தன. வாயில், பாத்திரம் துலக்க பயன்படுத்தப்படும் இரும்பு நார் திணிக்கப்பட்டிருந்தது. எனவே, அவர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இருப்பினும், இதை கொலை வழக்காக பதிவு செய்யாமல், மாறாக சந்தேக மரண என்ற அடிப்படையிலேயே விசாரித்து வருகின்றனர்.

ஜெயக்குமார் தனசிங் கடைசி நாட்களில் சென்ற இடங்களிலும் போலீசார் விசாரித்தனர். அந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சியில், வீட்டின் அருகே இருக்கும் கடை ஒன்றில் காணாமல் போன மே 2ஆம் தேதி இரவில் டார்ச் லைட் ஒன்று வாங்கியிருக்கிறார். தொடர் விசாரணையில், ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவிற்கு எழுதியாக கூறப்படும் 2 கடிதங்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதில், பலரது பெயர்களை குறிப்பிடிருந்தார்.

அந்த நபர்களுக்கும், தனக்கும் பணப்பிரச்னை இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவர்களில் சிலர் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் எழுதியிருந்தார். அந்த கடிதங்களின் அடிப்படையில் 32 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அந்த வகையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ரூபி மனோகரன் எம்.ஏல்.ஏ உள்ளிட்டோரும் இதில் அடங்குவார்கள். மேலும், ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சபாநாயகரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் அவரையும் விசாரிப்போம் என்று ஐ.ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார். இப்படியான சூழலில் தான், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

Also Read: வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

Latest News