Tirumala Tirupati: திருமணமான 15 நாள்.. திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. புதுமாப்பிள்ளை மரணம்! - Tamil News | newly married groom dies due to heart attack in tirupati andra pradesh in tamil | TV9 Tamil

Tirumala Tirupati: திருமணமான 15 நாள்.. திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. புதுமாப்பிள்ளை மரணம்!

Published: 

24 Aug 2024 10:13 AM

திருப்பதிக்கு தரிசனம் செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 15 நாட்களே ஆன நிலையில், மனைவியுடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். சாமியை தரிசிக்க படிக்கட்டுகளில் ஏறிச் சென்றபோது திடீரென இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Tirumala Tirupati: திருமணமான 15 நாள்.. திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. புதுமாப்பிள்ளை மரணம்!

மாதிரிப்படம்

Follow Us On

திருப்பதியில் அதிர்ச்சி: மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்படும் அரிய நோயாக இருந்தது. ஆனால், இப்போது வயது வரம்பு இல்லாமல் சிறியவர்களுக்கு கூட இந்த மாரடைப்பு ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு நிலைமை ரொம்வே மோசமாகிவிட்டது. ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்கள், குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், திருப்பதியில் இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நவீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர்.  இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இதனால், புதுமணத் தம்பதிகள் இருவருக்கு திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருக்கிறார்.

Also Read: திருப்பதியில் கிலோ கணக்கில் தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம்.. பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குடும்பத்தினர்..

அப்போது, சாமியை தரிசிக்க படிக்கட்டுகளில் ஏறிச் சென்றபோது திடீரென நவீன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.  அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

புதுமாப்பிள்ளை உயிரிழப்பு:

மேலும், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். தமிழகத்தைச் சேர்ந்த நவீன் திருமணத்திற்கு பிறகு பெங்களூருவில் குடிப்போக திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. இது அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 15 நாட்களில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஹைதராபாத் சாலையில் கொட்டிய பண மழை.. இளைஞர் செயலுக்கு குவியும் கண்டனம்!

இந்தியர்களின் மரபணு மாற்றம், ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவை முக்கிய பங்கு வகின்றன. புகைப்பிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் உள்ளிட்ட மேற்கத்திய வாழ்க்கை முறை இளம் இந்தியர்களை மாரடைப்பு அபாயங்களுக்கு மேலும் வழிவகுக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு, மன அழுத்தம் மேலாண்மை போன்ற ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிப்பது முக்கியம். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version