Nilgiris Election Results 2024 : ஆ. ராசா வெற்றி.. நீலகிரி தொகுதி மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்

நீலகிரி தொகுதி தேர்தல் முடிவுகள்: தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு என தனித்த சிறப்புகள் உண்டு. ஏனென்றால் நீலகிரி மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்று மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மீதம் உள்ள மூன்று தொகுதிகள் வெவ்வேறு மாவட்டங்களில் அமைந்திருக்கின்றன. உதகை, கூடலூர், குன்னூர் ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் கோயம்புத்தூரிலும் அவிநாசி திருப்பூரிலும் பவானிசாகர் ஈரோட்டிலும் உள்ளன.

Nilgiris Election Results 2024 : ஆ. ராசா வெற்றி.. நீலகிரி தொகுதி மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்

ஆ.ராசா

Updated On: 

04 Jun 2024 19:23 PM

ராசா வெற்றி : 2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆ.ராசா மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் 473212 வாக்குகள் பெற்று இந்த வெற்றியை அடைந்துள்ளார். அடுத்தப்படியாக பாஜகவின் எல்.முருகன் 232627 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு என தனித்த சிறப்புகள் உண்டு. ஏனென்றால் நீலகிரி மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்று மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மீதம் உள்ள மூன்று தொகுதிகள் வெவ்வேறு மாவட்டங்களில் அமைந்திருக்கின்றன. உதகை, கூடலூர், குன்னூர் ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் கோயம்புத்தூரிலும் அவிநாசி திருப்பூரிலும் பவானிசாகர் ஈரோட்டிலும் உள்ளன. மலைப்பகுதி, சமவெளிப் பகுதி என இருவேறு பகுதிகளை நீலகிரி மக்களவைத் தொகுதி கொண்டுள்ளது. நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அங்கு பெரும்பாலான சமயங்களில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.

2024 தேர்தல் நிலவரம்:

2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் ஆ.ராசா போட்டியிட்டார். அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் களத்தில் இருந்தார். பாஜகவில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட்டார். இங்கு முன்னாள் மத்திய அமைச்சரான திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மலைப்பகுதிகளைக் காட்டிலும் சமவெளிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளதால் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல நீலகிரி தொகுதியில் பட்டியலின பழங்குடியின மக்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நாயுடு நாயக்கர் ரெட்டியார் என தெலுங்கு மொழி பேசும் மக்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை:

நீலகிரி மக்களவை தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 18 ஆயிரத்து 915 வாக்காளர்கள் உள்ளனர்.

  1. ஆண் வாக்காளர்கள் – 6,83,021
  2. பெண் வாக்காளர்கள் – 7,35,797
  3. மூன்றாம் பாலினத்தவர் – 97

சட்டமன்ற தொகுதிகள்:

நீலகிரி தொகுதி ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அதாவது உதகமண்டலம், குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் (தனி) என ஆறு தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு தொகுதிகளும் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் என நான்கு மாவட்டங்களில் பிரிந்து கிடக்கின்றன. இத்தொகுதியை பொறுத்தவரை அதிக முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, எட்டு முறை காங்கிரஸ், திமுக மூன்று முறை, அதிமுக, பாஜக தலா இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு ஐந்து முறை வெற்றி பெற்று மத்திய இணையமைச்சராக பதவி வகித்துள்ளார். அதேபோல 1998,1999 பாஜக இருமுறை வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பாஜகவின் மாஸ்டர் மதனும் மத்திய இணையமைச்சராக பதிவி வகித்துள்ளார். 1977, 2014 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

முந்தைய தேர்தல் முடிவுகள்:

கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுகவின் ஆ.ராசா 5 லட்சத்து 47 ஆயிரத்து 832 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் தியாகராஜன் 3 லட்சத்து 42 ஆயிரத்து 009 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஆ.ராசா. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ராஜேந்திரன் 41,169, அமமுகவின் ராமசாமி 40,419 என அடுத்தடுத்து இடங்களை பிடித்தனர். கடந்த 2014 தேர்தலில் அதிமுகவின் கோபாலகிருஷ்ணன் 4 லட்சத்து 63 ஆயிரத்து 700 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் ஆ.ராசா 3 லட்சத்து 58 ஆயிரத்து 760 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!