5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

CM Stalin: ”ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது?” மம்தாவுக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின்!

NITI Aayog 2024: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய மாநில அரசுகள் இடையிலான நிர்வாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு அரசு விநியோக வழிமுறைகளை வலுப்படுத்தி கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும். இந்த கூட்டத்தை தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஹிமாச்சல பிரசேதம், கர்நாடக ஆகிய மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளன.

CM Stalin: ”ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது?” மம்தாவுக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Jul 2024 19:52 PM

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய மாநில அரசுகள் இடையிலான நிர்வாக ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு அரசு விநியோக வழிமுறைகளை வலுப்படுத்தி கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இந்த கூட்டத்தின் நோக்கமாகும். இந்த கூட்டத்தை தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஹிமாச்சல பிரசேதம், கர்நாடக ஆகிய மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலமான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் அவருக்கு பேச 5 நிமிடம் கூட வாய்ப்பு அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: நீலகிரி கோவையில் தொடரும் கனமழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படியா நடத்துவது? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தில் எதிர்க்கட்சிகளின் உரையாடல்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிரிகளாக நினைத்து அவர்களது குரலை ஒடுக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, ”தமிழ்நாட்டுக்குனு எந்த சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கும்னு எப்படித்தான் எதிர்பார்க்குறாங்களோ தெரியல? 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைச்சுருக்காங்க. இந்திய மக்கள் பெரும்பான்மைய அளிக்கல. ஒரு சில மாநில கட்சிகள் ஆதரவு அளிக்கலன பா.ஜ.க.வால ஆட்சி அமைக்கவே முடியாது.

இப்படிப்பட்ட நிலைமையில பா.ஜ.க.வோட சறுக்கலுக்கு என்ன காரணம்னு உணர்ந்து பா.ஜ.க. திருந்திருக்கும்னு நினைச்சேன். ஆனால் எமாற்றம் தான் மிஞ்சியது. பட்ஜெட்டுக்கு 2 நாள் முன்னாடிகூட தமிழ்நாட்டோட தேவை என்னனு பா.ஜ.க.வுக்கு தெரியப்படுத்துனேன். அதுல இருந்து ஒன்னு கூட நிதியமைச்சர் அறிவிக்கல. அவ்வளவு ஏன் தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டுல இல்ல. ஒவ்வொரு ஆண்டு பேருக்கு திருக்குறள் சொல்லி பட்ஜெட் தொடங்குவார்கள். இந்த ஆண்டு அதுவும் இல்லை. திருவள்ளுவரும் கசந்து போயிட்டாரு போல” என பேசியுள்ளார்.

Also Read: குட் நியூஸ் மாணவர்களே… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெங்கு தெரியுமா?

Latest News