5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விஜய் காலில் விழுமாறு யாரும் சொல்லவில்லை – கள்ளக்குறிச்சி பெண் விளக்கம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இருக்கும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பெண் ஒருவர் விஜயின் காலில் விழுந்து கதறி அழுதார். அந்தப் பெண்ணை விஜய் காலில் விழும்படி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் வற்புறுத்தியதாக வீடியோவில் வெளியான நிலையில், அதற்கு அந்த பெண்மணி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் காலில் விழுமாறு யாரும் சொல்லவில்லை – கள்ளக்குறிச்சி பெண் விளக்கம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 25 Jun 2024 09:36 AM

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடிக்க 200க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் சேலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பெரும் துயர சம்பவம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Also Read: Rainy Season: மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இதோ..!

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பெண்மணி ஒருவர் காலில் விழுந்து தனது கணவரை காப்பாற்றும்படி கதறி அழுதார். அவரை அரவணைத்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய், மருத்துவர்களையும் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது அந்தப் பெண்ணின் அருகில் இருந்த ஒருவர் காதில் விழும்படி கூறியதாகவும் அதன் பெயரிலேயே அவர் காலில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், காசு கொடுத்து காலில் விழச் சொன்னதாக தகவல்கள் உலா வந்தன. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்தப் பெண் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் வந்தவுடன் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால் அவரை கட்டிப்பிடித்து அழுதேன். நாங்க எதுவும் இல்லாத ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள், நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறினான் உணர்ச்சிவசப்பட்டு அழுதேன் என்று கூறினார். அதற்கு நடிகர் விஜய் அழாதீங்க என்று கூறியதாகவும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Tamilnadu Weather Alert: தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை.. எத்தனை நாட்களுக்கு அலர்ட்? எங்கெங்கு?

விஜயை பார்த்தபோது இதை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. காலில் விழும்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வந்தார் அவர் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வந்ததன் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் கட்சி என்று விமர்சனம் செய்து வந்தனர் ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு நடிகர் விஜய் தமிழக அரசை எதிர்த்து விமர்சனம் செய்திருந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News