5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Periyar Birthday | பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் பூ மாலை வைத்து, பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.

பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Sep 2024 15:02 PM

தமிழகத்தில் நேற்று பெரியாரின் 146வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜயின் இந்த செயலுக்கு பாஜகவினர் உள்ளிட்ட பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பல அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மண்டையை பொளக்கும் வெயில்..

பெரியாரின் 146வது பிறந்தநாள்

பெரியாரின் 146வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுமட்டுமன்றி பலர் தங்களது சமூக வலைத்தள பங்கங்களிலும் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தனர். இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று பெரியார் சிலைக்கு திடலில் மரியாதை செலுத்தினார்.

பெரியார் திடலில் மரியாதை செலுத்திய விஜய்

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது நினைவு இடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் பூ மாலை வைத்து, பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார். முன்னதாக, பெரியாரின் பிறந்தநாளையொட்டி விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்; சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : Exclusive: வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை.. காரணம் என்ன? பிரத்யேக பேட்டி அளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்..

விஜயின் அரசியல் நிலைப்பாடு

விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே என்ன நிலைப்பாடு எடுப்பார், எந்த கொள்கையை பின்பற்றுவார் என அரசியல் களமே ஆவளுடன் காத்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது, அவர் திராவிட கொள்கைகளை தான் பின்பற்றுகிறார் என பேசு பொருளாக மாரியது. விஜயின் இந்த செயலுக்கு பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஒருபுறம் இருக்க விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமாவளவன், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : J&K Assembly Elections: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. யாருக்கு சாதகமாக உள்ளது களம்?

அமைச்சர் உதயநிதி வாழ்த்து

இந்த நிலையில் நடிகர் விஜய் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியலை பொருத்தவரை, யாராக இருந்தாலும் பெரியாரதைத் தொடாமல் இங்கு அரசியல் செய்ய முடியாது. பெரியாரை தொடாமலும், அவரை மீறியும் யாராலும் இங்கு அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியதை வரவேற்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Latest News