Rain Alert: உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. அலர்ட்டான தமிழக அரசு! - Tamil News | Northeast Monsoon Alert Low pressure area has formed over South East Bay | TV9 Tamil

Rain Alert: உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. அலர்ட்டான தமிழக அரசு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் வடதமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

Rain Alert: உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. அலர்ட்டான தமிழக அரசு!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Updated On: 

14 Oct 2024 12:29 PM

வடகிழக்கு பருவமழை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் வடதமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வடகிழக்கு பருவமழை.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை!

மேலும்  தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காவண்ணம் விரைந்து செயல்பட வேண்டும். மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று காலை 11 மணிக்கு உயர் அதிகாரியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Crime: மகளை கொலை செய்ய முடிவெடுத்த தாய்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில், “வடதமிழ்நாட்டின் மேல் மேகக்கூட்டம் உருவானதால் சென்னையில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இது ஆரம்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பகல் நேரத்தில் மழை பெய்வதில் இடைவெளி இருக்கும். அதேசமயம் இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்யக்கூடும். இன்று பகலில் இடைவெளியுடன் மழை இருக்கும் என்பதால் பாதுகாப்பாக அலுவலகம் செல்லலாம். பகலில் சூரியன் சிறிது நேரம் வெளிப்படலாம்.  அக்டோபர் 16 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில்  மிக கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஷிப்ட் வாரியாக  24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகரில் மட்டும் 50 இடங்களில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற ஆயுதப்படை காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும்,  காவல் நிலையங்கள் மாறியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும். ஆனால் இம்முறை 5 நாட்கள் முன்னதாகவே அக்டோபர் 15 அல்லது 16 ஆம் தேதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரை லிட்டர் பால் 50,000 எண்ணிக்கையிலும், 90 நாட்கள் வரை கெடாமல் இருப்பு வைக்கக்கூடிய பால் சோழிங்கநல்லூர் பால் பண்ணையிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...
நடிகை மடோனாவின் நியூ ஆல்பம்..!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..?