5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வீட்டிற்கு மின் இணைப்பு பெற கஷ்டமா இருக்கா? இனி கவலை வேண்டாம்.. மின்வாரியம் செம்ம முடிவு!

தமிழ்நாட்டில் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என விதிமுறைகளில் புதிய தளர்வுகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கட்டுமான அமைப்புகள், பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்த நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வீட்டிற்கு மின் இணைப்பு பெற கஷ்டமா இருக்கா? இனி கவலை வேண்டாம்.. மின்வாரியம் செம்ம முடிவு!
மின்வாரியம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 12 Jul 2024 14:56 PM

கட்டிட நிறைவு சான்றிதழ்: தமிழ்நாட்டில் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என விதிமுறைகளில் புதிய தளர்வுகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் விதிமீறல் கட்டிடங்கள் கட்டப்படுவதை தவிர்க்கவே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்பட அரசின் பல்வேறு வசதிகளை பெற கட்டிட சான்றிதழ் பெற வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது. இதனால், புதிய வீடு கட்டுவோர் அல்லது தொழிற்சாலைகள் கட்டுவோர் மின் இணைப்பு பெற கட்டிட பணி நிறைவு சான்றிதழ் அவசியம். தமிழ்நாட்டில் பொது கட்டிட விதிகள் தொடர்பாக 2019ல் புதிய சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அனுமதி பெறுவோர், விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடங்களை கட்டியுள்ளனரா என்பதை உறுதி செய்ய சிசி என்படும் பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று அரசு அறிவித்தது. அதன்படி, மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டுவோர், கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கட்டுமான அமைப்புகள், பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. பெரிய கட்டிடங்களை விட சிறிய அளவில் வீடு கட்டுவோர் இந்த கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதற்கு பல்வேறு வகையில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read: சர்ச்சையில் சிக்கிய டிடிஃப் வாசன்.. இந்த முறை இப்படியா? வலுக்கும் கண்டனங்கள்..

எந்தெந்த கட்டிடங்களுக்கு?

இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவையில்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் பரப்பனவிற்குட்பட்ட வீடு, 14 மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள், அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலேயே கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற முடியும்.

முன்னதாக,  புதிதாக மின் இணைப்பு கோருவோர் புதிய தேவையான ஆவணங்களை அளித்து மின் இணைப்பு பெற முடியும். வீட்டிற்கு மின் இணைப்பு வாங்க விண்ணப்ப படிவும் 1ஐ எந்த வித கட்டணமும் இல்லாமல் வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பை பெற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது அதில் விலக்கு அளிக்கப்பட்டது வரவேற்பை பெற்ற போதிலும் எதிர்ப்பும் உள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் விதி மீறல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கெல்லாம் தெரியுமா?

Latest News