5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நீங்க சங்கியா? ரஜினியுடன் என்ன பேசீனிங்க? சீமான் பதில்!

Seeman Rajinikanth meeting : ரஜினியுடன் அரசியல் பேசினேன் என சீமான் கூறியுள்ளார். மேலும், இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு எனவும் முன்பே அவரை சந்திக்க திட்டமிட்டேன் எனவும் சீமான் பதிலளித்துள்ளார்.

நீங்க சங்கியா? ரஜினியுடன் என்ன பேசீனிங்க? சீமான் பதில்!
ரஜினி காந்த் உடன் சீமான் சந்திப்பு- விளக்கம்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 22 Nov 2024 18:58 PM

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசியது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடன் என்ன பேசினேன் என்பதை சீமான் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், ரஜினிகாந்த் உடன் அரசியல் பேசினேன் என்றார். தொடர்ந்து பேசிய சீமான், ரஜினிகாந்துக்கு அரசியல் வராது என்ற கருத்தையும் முன்வைத்தார்.

தமிழக அரசியலில் பரபரப்பு

ரஜினிகாந்த்- சீமான் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இருவரும் என்னப் பேசினார்கள் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின.
இது பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானே தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

ரஜினி உடன் பேசியது என்ன?

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியில், “நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அரசியல் பேசினேன். அரசியல் என்பது வாழ்வியல். அந்தக் கருத்தில் அவர் உடன்படுகிறார். எனினும் அவருக்கு சரிவராது.
அவர் சிஸ்டம் சரியில்லை என்றார். அதைத்தான் அமை்ப்பு சரியில்லை என நான் பல முறை வலியுறுத்தி வருகிறேன்” என்றார்.

இதையும் படிங்க : Seeman Rajinikanth: திடீரென ரஜினியை நேரில் சந்தித்த சீமான்.. பின்னணி என்ன?

நீங்க சங்கியா?

தொடர்ந்து, செய்தியாளர் நீங்க பாரதிய ஜனதாவின் பி டீம் என திமுகவினர் விமர்சிக்கிறார்களே எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு, நான் என்னப் பேசினேனன் என எப்போதும் வெளிப்படையாக பேசிவருகிறேன். திமுகவும் பாஜகவும் உறவாடி வருகின்றனர்.
நினைத்த நேரத்தில் எல்லாம் பிரதமரை சென்று மு.க. ஸ்டாலின் சம்பந்தி போல் சந்திக்கிறார். அவர்கள் என்ன பேசினார்கள் என வெளிப்படையாக கூறுவார்களா? என்றார்.

மேலும், சங்கி என்றால் சக தோழன், நண்பன் எனப் பொருள். அதனை சங் பரிவார் உடன் இணைத்துப் பேசுகிறார்கள் எனவும் கூறினார்.
தொடர்ந்து, ரஜினி காந்த்-ஐ சந்தித்த நான் சங்கி என்றால் அவர்கள் என்ன சொங்கியா? எனவும் பதில் கேள்வியெழுப்பினார். இதற்கிடையில் ரஜினிகாந்த் கூறியது படி தமிழ்நாட்டில் இன்னமும் அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்றார். இதையடுத்து நல்ல தலைவருக்கான தேவையும் உள்ளது” என்றார்.

தாமதமான சந்திப்பா?

முன்னதாக சீமான், “நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ கடந்த காலத்திலே சந்திக்க திட்டமிட்டேன். ஆனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. பெரும்பாலும் அவர் ஷுட்டிங்கில் இருந்தார்.
அவருக்கு நேரம் இருந்த போது, நான் அரசியல் பயணங்களில் இருந்தேன். இதனால் இருவரின் சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது” என்றார். ரஜினிகாந்த்- சீமான் சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில், 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  ரஜினிகாந்த்- சீமான் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. பல யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : AIADMK: கோஷ்டி மோதலில் சிக்கி தவிக்கிறதா அதிமுக? – மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

Latest News