5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஜூன் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின்படி சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது, திங்கள்கிழமை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில்கள் (திங்கள்கிழமை) சனிக்கிழமை நேர அட்டவணைப்படி இயக்கப்படும். அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க!
சென்னை மெட்ரோ ரயில்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 17 Jun 2024 07:52 AM

சென்னை மெட்ரோ ரயில்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஜூன் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின்படி சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது, “திங்கள்கிழமை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில்கள் (திங்கள்கிழமை) சனிக்கிழமை நேர அட்டவணைப்படி இயக்கப்படும். அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, பகல் 11 மணி முதல் 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. புறக்கணிக்கும் தேமுதிக.. இபிஎஸ் வழியில் பிரேமலதா!

சென்னை மெட்ரோ ரயில்:

சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது மெட்ரோ ரயில் சேவை. இதில், நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது வரை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்போடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.

அதேபோல, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடம் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு.. காரணம் என்ன?

Latest News