5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!
சென்னை மெட்ரோ ரயில்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Aug 2024 07:06 AM

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் இடைவெளியில் இயங்கும். அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயிலக்ள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

சென்னை மெட்ரோ:

சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது மெட்ரோ ரயில் சேவை. இதில், நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது வரை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்போடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடம் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

Also Read: சென்னையில் திடீர் மாற்றம்.. இந்தெந்த ரூட்டெல்லாம் மாறுது.. வெளியான முக்கிய அறிவிப்பு!

மக்கள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.  தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதவரம் பால் பண்ணை – சிப்காட் பூங்கா, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம், மாதவரம் பால் பண்டை – சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Latest News