நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில், நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

29 Oct 2024 17:44 PM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது பள்ளி, கல்லூரிகள் காலை அதாவது முற்பகல் மட்டும் செயல்படும் என்றும் பிற்பகல் அரைநாள் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலரும் தீபாவளி கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி உலகெங்கும் இருக்கும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தீபாவளி அன்று அதிகாலை எழுந்து குளித்து விட்டு, வீட்டில் பூஜை செய்த பின் புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். மேலும், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து ஒன்றாக அந்த நாளை கழிப்பார்கள்.

மேலும் வீடுகளில் தீபாவளி என்றாலே ஒரு வார காலத்திற்கு முன் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதிரசம், முறுக்கு, சீடை, இனிப்பு வகைகள் என தயார் செய்ய தொடங்குவார்கள். குழந்தைகளை பொறுத்தவரை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாலே முறுக்கு, இனிப்பு வகைகளை சாப்பிட்டு விட்டு பட்டாசு போடுவது தான் வழக்கம். பாரும் தீபாவளி பண்டிகை என்றால் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அதாவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது. அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்.. அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து ஆலோசனை மேற்கொண்டது. அதன் பின், அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனால் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தஙகளது சொந்த ஊர்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் புதுச்சேரி அரசு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்தது. அதாவது தொடர்ந்து 5 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: ’அமரன்’ போர் பற்றிய படமா? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு நாளை அரைநாள் மட்டும் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது. அதாவது நாளை முற்பகல் மட்டும் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்றும், பிற்பகல் அரைநாள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!