5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தீபாவளியன்று பதிவு செய்யப்பட்ட 347 வழக்குகள்.. கடந்த ஆண்டு எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகை நேற்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் இந்து மக்கள் அனைவராளும் கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே அதிகாலை எழுந்தவுடன் நல்லெண்ணெய் தடவி குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவது தான்.

தீபாவளியன்று பதிவு செய்யப்பட்ட 347 வழக்குகள்.. கடந்த ஆண்டு எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 01 Nov 2024 17:55 PM

அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடிப்பு: சென்னையில் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் காலை 6:00 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நேரம் விதித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக 347 வழக்குகள் சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நேற்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் இந்து மக்கள் அனைவராளும் கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே அதிகாலை எழுந்தவுடன் நல்லெண்ணெய் தடவி குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவது தான்.

பதியப்பட்ட 347 வழக்குகள்:

அதே போல், குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால் பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்கவும், பாதிகாப்புடன் வெடிக்கவும் பல்வேறு கட்டங்களாக மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில சமயத்தில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதாவது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும் என உயர்நீதிமன்றம் கட்டுபாடு விதித்தது.

மேலும் படிக்க: தீபாவளி எதிரொலி.. சென்னையில் 3 இடங்களில் மோசமான காற்றின் தரம்!

இதனை தொடர்ந்து நேற்று தீபாவளி தினத்தை ஒட்டி குறிப்பிடப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் பட்டாசு வெடித்ததாக கூறி சுமார் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 554 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மோசமான காற்றின் தரம்:

தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னையில் காற்றின் மாசு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி, பெருங்குடியில் காற்றின் தர குறியீடு 237 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் காற்றின் தர குறியீடு 219 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆலந்தூரில் தர குறியீடு 211 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரஷ்யாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய வட கொரியா.. எல்லையில் குவிக்கப்பட்ட 10 ஆயிரம் வீரர்கள்..

பொதுவாக காற்றின் தரக்குறியீடும் 150 புள்ளிகளுக்குள் இருந்தால் அது சுவாசிக்க ஏதுவான காற்றாகும். 200 புள்ளிகள் வரை இருந்தால் அது சற்று மாசடைந்துள்ளதாக அர்த்தம். 200 முதல் 300 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏதுவான காற்று இல்லை என்றும் 300 புள்ளிகளை தாண்டினால் சுவாச கோளாறு ஏற்ப்ட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று மாசு தடுக்கவே இந்த நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்துகள்:

இது ஒரு பக்கம் இருக்க, பட்டாசுகள் வெடித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 232 தீ விபத்துகளும், அதில் ராக்கெட் வெடித்து 107 விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துகளின் காரணமாக சுமார் 500 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் 12 வயது சிறுவன் தீ விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் 48 தீ விபத்துகள் பதிவாகியுள்ளது.

Latest News