Crime: ஆன்லைன் டேட்டிங் ஆப் பகீர்.. ரூ.27000 பணத்தை ஏமாந்த சினிமா டெக்னீஷியன்.. சென்னையில் ஷாக்! - Tamil News | | TV9 Tamil

Crime: ஆன்லைன் டேட்டிங் ஆப் பகீர்.. ரூ.27000 பணத்தை ஏமாந்த சினிமா டெக்னீஷியன்.. சென்னையில் ஷாக்!

Chennai Crime: வடபழனியில் பத்து நாட்களுக்கு முன் Grindr ஆப் மூலம் அறிமுகமான நண்பரை சந்திக்க சென்ற 56 வயது நபரை கத்திமுனையில் மிரட்டி ரூ.27 ஆயிரத்தை எட்டு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சம்பவம் நடந்துள்ளது. புகாரின் பேரில், பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டையை சேர்ந்த மாதவன்(21), வடபழனியை சேர்ந்த இம்ரான்@ லோகு(20), பரத் குமார்(21) மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரை கைது செய்தனர்.

Crime: ஆன்லைன் டேட்டிங் ஆப் பகீர்.. ரூ.27000 பணத்தை ஏமாந்த சினிமா டெக்னீஷியன்.. சென்னையில் ஷாக்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

26 Jun 2024 13:03 PM

சென்னை: வடபழனியில் பத்து நாட்களுக்கு முன் Grindr ஆப் மூலம் அறிமுகமான நண்பரை சந்திக்க சென்ற 56 வயது நபரை கத்திமுனையில் மிரட்டி ரூ.27 ஆயிரத்தை எட்டு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மைனர் உட்பட நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திரைப்படத்துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிகிறார் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின்படி, அவர் சமூக வலைதள செயலி மூலம் ஒருவருடன் பழகி, அவருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். புதிய நண்பரின் வற்புறுத்தலின் பேரில், குமார் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு வடபழனி கோயில் குளம் அருகே முதலில் சந்தித்துள்ளனர்

நண்பர் தனது ஒரிஜினல் பெயர் மாதவன் என்றும், குமாரிடம் அவரது வீடு அருகில் இருப்பதாகவும், வீட்டில் நேரத்தை செலவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவர்கள் வீட்டில் இருந்தபோது, மாதவன் போன் செய்ததையடுத்து, மூன்று பேர் வீட்டுக்குள் புகுந்தனர். புதிதாக நுழைந்தவர்கள், குமாரை கத்தியைக் காட்டி மிரட்டி, மாதவனிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறீர்களா எனக் கேட்டு, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

Also Read: திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க போலீஸ் எடுத்துள்ள புதிய முயற்சி.. ஐவிஎம்எஸ் தொழில்நுட்பம் என்றால் என்ன?

தன்னிடம் பணம் எதுமில்லை என்று குமார் கூறியபோது, நண்பர்களிடம் கேட்குமாறு மிரட்டியுள்ளனர். அந்த கும்பலுடன் மேலும் 4 பேர் சேர்ந்தனர், அந்த கும்பல் குமாரை சுற்றி வளைத்து அவருக்கு தீங்கு விளைவிப்பதாக மிரட்டினர். பின் குமார் நண்பர்களை அழைத்து பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் செல்ல்போன் எண்ணுக்கு Gpay மூலம் பணப் பரிமாற்றம் செய்தனர். பணம் பரிமாற்றம் செய்த நண்பர்களுக்கு குமார் அழைக்க முயற்சி செய்தார். அப்போது கும்பலைச் சேர்ந்த ஒருவர், குமாரின் போனைப் பறித்து, பணத்தை வேறொரு எண்ணுக்கு மாற்றி அனுப்பியுள்ளார். பின், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், குமாரை மிரட்டி. சம்பவத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

பின்னர் நண்பர்களுடன் கலந்துரையாடிய பின்னர், குமார் வடபழனி போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டையை சேர்ந்த மாதவன்(21), வடபழனியை சேர்ந்த இம்ரான்@ லோகு(20), பரத் குமார்(21) மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரை கைது செய்தனர்.

இவர்களில் மாதவன் மீது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்கு உள்ளது. எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த மாதவன் கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய படி, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இது போன்ற மோசடி செய்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இம்ரான்@ லோகு மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கும், வடபழனி, அசோக் நகர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாக உள்ள வெள்ளை ஷியாம், இம்மானுவேல்@ கிஷோர் குமார், தமிம் அன்சாரி, தாஜுதின் ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர். கைதான மாதவன் உள்ளிட்ட நான்கு பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவை சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் இரண்டாவது சம்பவம் என்பதால் அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.

Also Read: தமிழ்நாடு சட்டப்பேரவை.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்..

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!