5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Nilgiris Rain : 40செமீ வரை கனமழை.. வெள்ளக்காடான நீலகிரி.. வீடுகளில் புகுந்த மழை நீர்!

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக வால்பாறையில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களில் இருக்கும் பள்ளிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Nilgiris Rain : 40செமீ வரை கனமழை.. வெள்ளக்காடான நீலகிரி.. வீடுகளில் புகுந்த மழை நீர்!
நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 18 Jul 2024 09:43 AM

நீலகிரியில் தொடரும் மழை: தமிழ்நாட்டில் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நீலகிரி கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பலரும் தண்ணீரில் சிக்கிய நிலையில் அவர்களை பத்திரமாக மீட்பு படையினர் மீட்டனர். இந்நிலையில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக வால்பாறையில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களில் இருக்கும் பள்ளிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் கனமழையால் அதிகப்படியான குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி (நீலகிரி) 34, மேல் பவானி (நீலகிரி) 22, தேவாலா (நீலகிரி) 15, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 14, எமரால்டு (நீலகிரி) , விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) தலா 13, குந்தா பாலம் (நீலகிரி) 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதிகளில் இருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுகிறது. இதனை சமாளிக்க ஆங்காங்கே மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து.

மேலும் படிக்க: சென்னை அருகே துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது.. சிக்கியது எப்படி ?

Latest News