Parking: சென்னையில் பார்க்கிங் இலவசம்… மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட மாநகராட்சி..! - Tamil News | Parking is free in Chennai... The corporation made a happy announcement..! | TV9 Tamil

Parking: சென்னையில் பார்க்கிங் இலவசம்… மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட மாநகராட்சி..!

Updated On: 

10 Jun 2024 08:13 AM

வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களில் புதிய டெண்டர் விடும் வரை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் இலவசம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.sஎ

Parking: சென்னையில் பார்க்கிங் இலவசம்... மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட மாநகராட்சி..!

சென்னை மாநகராட்சி பார்கிங்

Follow Us On

சென்னையில் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டநிலையில், தமிழக அரசு, வாகங்களுக்கான பார்க்கிங் வசதியை ஏற்படுத்தியது. வாகன நிறுத்தத்திற்கு புதிய ஒப்பந்தம் வரும் வரையில் மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களைத் தடுக்க முக்கிய இடங்களில் பார்க்கிங் வசதிகளை மாநகராட்சி செய்து வருகிறது. முக்கிய வணிகப் பகுதிகள், வணிக நிறுவனங்கள், சுற்றுலாப் பகுதிகள், பூங்காக்கள், தனியார் மால்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பார்க்கிங் பிரச்னைகள் இருப்பதால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிகுள்ளாகின.

தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சி ஆன சென்னை மாநகராட்சியில் வருவாயை அதிகரிக்கவும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களில் புதிய டெண்டர் விடும் வரை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் இலவசம் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கு சென்னை மெரினா பெசன்ட் நகர் கடற்கரை தியாகராய நகர் பாண்டி பஜார் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகன நிறுத்தும் இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு இரு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் ஐந்தும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 20-ம் கட்டணமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அதிக கட்டண வசூலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஸ்மார்ட் வாகன நிறுத்தும் இடங்கள் செயல்படும் பகுதியில் 25 மீட்டர் இடைவேளையில் இதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வாகன நிற்கும் இடங்களை டெண்டர் எடுத்துள்ள நிறுவனம் சென்னை மெரினா கடற்கரையில் முறையாக செயல்படவில்லை எனவும் வாகன ஓட்டிகளிடம் ரூபாய் 300 வரை பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் காவல்துறை வழக்கு வரை சென்றதாகவும் புகார் வந்த நிலையில் இந்த வாகன நிறுத்தும் இடத்திற்கான தனியார் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பார்க்கிங் ஒப்பந்தத்தை ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் வாகனம் நிறுத்தம் இடங்களை புதிய டெண்டர் விடும் வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், ரவுடிகளை வைத்து யாரேனும் மிரட்டினால் அவர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version