5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Holiday: தீபாவளி விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்!

தீபாவளி விடுமுறை: தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 31) கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாளை தொடங்கி தொடர் நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்றாலே பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

Diwali Holiday: தீபாவளி விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த கிளாம்பாக்கம்!
சென்னை பேருந்து நிலையம் (picture credit : Twitter)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Oct 2024 07:25 AM

தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 31) கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாளை தொடங்கி தொடர் நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்றாலே பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அந்த வகையில் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் பலரும் சொந்த ஊர்களுக்கு நேற்று இரவு முதலே பயணம் செய்ய தொடங்கிவிட்டார். தீபாவளி என்றால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்புவார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து ரயில்கள், பேருந்துகளில் மக்கள் செல்வார்கள்.

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வெளியேறுவார்கள். இதனால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிமாக இருக்கும். குறிப்பாக நேற்று இரவு முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிமாக இருந்து வருகிறது. இதனால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.

மேலும், சொந்த ஊர்களுக்கு கார்களில் செல்வதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது.

Also Read : சென்னையில் ரூ.27 கோடி மதிப்பிலான மெத்தப்பட்டமைன் பறிமுதல்.. சினிமா பாணியில் தட்டித்தூக்கிய போலீஸ்..

பெருங்ளத்தூர், கூடுவாஞ்சேரி பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வரமுடியவில்லை. மேலும், ஒரே நேரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையில் அனைவரும் கூடியதால், இணையதள சேவை பாதிக்கப்பட்டது.

சிறப்பு பேருந்துகள், ரயில்கள்:

பண்டிகை தினத்தையொட்டி, ஏராளமான மக்கள் சொந்த ஊர்க செல்வதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அதேபோல, கார்ம மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில்,  தாம்பரம், பெங்களத்தூர் தவிர்த்து திருப்பேரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சன்று சாலை வழியாக செல்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள்,  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 14,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாதவதம், கிளாம்பாக்கம், கோயம்போடு பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரல் சேவை நீட்டிப்பு:

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சென்னை மெட்ரோ ரயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நாளை 30.10.2024 (புதன்கிழமை) மெட்ரோ இரயில் சேவைகள் பின்வரும் அட்டவணையின் படி இயக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு..

காலை 5 மணி முதல் இரவு 12 மணிவரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப்புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 12 மணிக்கு புறப்படும்).

காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

Latest News