Accident: அதிர்ச்சியில் மக்கள்.. தமிழ்நாட்டில் ஒரேநாளில் இத்தனை விபத்துகளா?
கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல் உயிரிழப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. இதனால் சாலையில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், சாலை விதிகளை கடைபிடித்து செல்லவும் பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சாலை விபத்துகள்: தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாலையில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், சாலை விதிகளை கடைபிடித்து செல்லவும் பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல் உயிரிழப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் 3 இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற விபத்துகள்
- பரமக்குடி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி அருகே எதிர் திசையில் வந்த பைக் மீது கார் மோதிய விபத்தில் லோகநாதன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரிடம் பரமக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குழி கிராமத்தில் அறுந்து கிடந்த மின் ஒயரைத் தொட்ட அகிலேஷ் என்ற 3 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தான். இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே வழியில் நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து திடீரென எதிர்திசையில் திரும்ப முற்பட்டது. இதனால் இரண்டு பேருந்துகளும் மோதியதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்த் தப்பினர். இந்த விபத்தில் பேருந்து முன் பக்கம் உருக்குலைந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: Ration Card : ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!
- மதுரை மாவட்டம் விரகனூர் சுற்று வட்டச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைத்தனர். இதனிடையே காரில் பயணித்த கணவன், மனைவி இருவரும் காயங்கள் இன்றி உயிர்த் தப்பினர். தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்ட நிலையில் பொருட்கள் முற்றிலும் இருந்து சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை ஈஞ்சம்பாக்கம் அருகே மின்சார கம்பத்தில் மோதி கார் தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த நான்கு பேர் காயம் என்று உயிர் தப்பினர். காரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா அல்லது குடிபோதையில் வாகனத்தை இயக்கினார்களா என்ற கோணத்தில் இதுதொடர்பாக ஈஞ்சம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: Chandrababu Naidu: 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் சீட்.. சந்திரபாபு நாயுடு அதிரடி!
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி வீரக்கல் பகுதியில் உள்ள ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவருடைய மகள் ரேவதி மற்றும் மகன் சிவஸ்ரீ ஆகியோருடன் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி ஆகிய மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் துணி துவைப்பதற்காக சென்றனர். இதனையடுத்து வேலையெல்லாம் முடிந்த பிறகு ஏரியில் குளித்து விளையாட முடிவு செய்த அவர்கள் ஆழமான பகுதிக்கு இறங்கிச் சென்றுள்ளனர். இதில் தண்ணீரில் சிக்கி நீச்சல் தெரியாததால் 3 பேரும் நீரில் தத்தளித்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.