Tiruchendur: மது கொடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. உடற்கல்வி ஆசிரியர் கைது!

Crime: மறுநாள் விளையாட்டுப் போட்டி என்ற நிலையில் முதல் நாளே அங்கு சென்ற மாணவிகள்  தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மாணவிகளை மது அருந்த சொல்லி உடற்கல்வி ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவிகளிடம் பொன்சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Tiruchendur: மது கொடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. உடற்கல்வி ஆசிரியர் கைது!

ஆசிரியர் பொன்சிங்

Updated On: 

11 Nov 2024 18:39 PM

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில்  தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றுத்தரப்படுகிறது. பிரபலமான பள்ளி என்பதால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பொன்சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.  இதனிடையே கடந்த அக்டோபர் 22ஆம் தேதி பள்ளியில் பயின்று வரும் 5 மாணவிகளை தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக உடற்பயிற்சி ஆசிரியரான பொன்சிங் அழைத்து சென்றுள்ளார்.

Also Read: தெலங்கானாவில் மாவட்ட ஆட்சியர், தாசில்தாரை தாக்கிய மக்கள்

மறுநாள் விளையாட்டுப் போட்டி என்ற நிலையில் முதல் நாளே அங்கு சென்ற மாணவிகள்  தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மாணவிகளை மது அருந்த சொல்லி உடற்கல்வி ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவிகளிடம் பொன்சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர்களிடமோ, பள்ளியிலோ அல்லது வெளியிலோ தெரிவித்தால் அனைவரையும் பள்ளியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பேன் என உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மிரட்டியுள்ளார்.

இப்படியான நிலையில் பொன்சிங் செய்த சம்பவத்தால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாணவிகள் தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அனைத்தையும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக திருச்செந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மாணவிகளை தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று கேட்டபோது பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Viral Video : அந்தரங்க வீடியோ சர்ச்சை.. இணையத்தில் வைரலாகும் மினாஹில் மாலிக்கின் நடன வீடியோ!

இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் பொன்சிங் தலைமறைவாக இருந்தார். அவரது செல்போன் சிக்னலை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு  உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருச்செந்தூர் பகுதி மக்களும் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக கல்வி நிலையங்களில் மாணவ, மாணவிகள் மீது தொடுக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களில் சிலர் இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் கலங்கப்படுத்துவது போல் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு நாளில் பாதி நேரத்தை ஆசிரியர்களை நம்பித்தான் கல்வி நிலையங்களில் விட்டு வருகிறார்கள். ஆனால் அங்கு இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவது மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?