5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Trichy Airport: விமானம் பத்திரமாக தரையிறங்கியது.. வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்தது ஏன்?

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இன்று மாலை 5.40 மணிக்கு திருச்சியில் இருந்து 144 பயணிகlளுடன் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

Trichy Airport: விமானம் பத்திரமாக தரையிறங்கியது.. வானில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்தது ஏன்?
ஏர் இந்திய விமானம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Oct 2024 22:15 PM

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இன்று மாலை 5.40 மணிக்கு திருச்சியில் இருந்து 144 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் விமான வட்டமடித்திருக்கிறது. விமானம் தரையிறக்குவதில் சிக்கல் நீடிப்பதால் ஒரு மணிநேரத்திற்கு மேலாக வானில் விமானம் வட்டமிட்டு வருகிறது.  புதுக்கோட்டை, திருச்சி மாவட் எல்லை பகுதிகளில் விமானம் வட்டமடித்தது.

வானத்தில் வட்டமடிக்கும் விமானம்

அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 17 முறைக்கு மேலாக சம்பந்தப்பட்ட விமானம் கூற்றியுள்ளது.  மேலும், பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்காணமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விமானம் வட்டமடித்தது.  எரிபொருள் தீரும் நிலையில், தரை இறக்க விமான அதிகாரிகள் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை அலர்ட்… எந்தெந்த மாவட்டங்கள்?

விமானம் நடுவானில் சென்றபோது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தில் மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால், எரிபொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரையிறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொருள் முழுவதும்  இருக்கும் போது அவசரமாக தரையிறக்கம் செய்தால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானில் விமானம் வட்டமடித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், போலீசாருக்கு குவிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் திருச்சி விமான நிலையத்தில் உள்ளன.

141 பயணிகளின் கதி என்ன?

திருச்சியில் சுற்றுவட்டாரத்தில் விமானம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்து வருவதால் அங்கிருக்கும் 144 பயணிகள் அச்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், பயணிகளும் குடும்பத்தினரும் பீதியடைந்துள்ளனர்.

Also Read: மதுரை முதலமைச்சர் கோப்பை போட்டி.. வீரர்களிடையே மோதலால் பரபரப்பு..

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “விமான நிலைய இயக்குனர் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கும் என்றும் தெரிவித்தார். தற்போது எரிபொருளை காலி செய்ய விமானம் சுற்றி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினரை தயார் நிலையில் வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  சுமார் இரண்டரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம், எமர்ஜென்சி முறையில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.   சுமார் 8.15 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.  விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி பெல்லி லேண்டிங் என்ற முறையில் விமானம் தரை இறக்கப்பட்டது.

விமானி சாதுரயமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறங்கப்பட்ட நிலையில், பின் பகுதியில் லேசாக புகை மட்டும் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து, விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதில் இருந்த பயணிகளும் பத்திரமாக உள்ளனர். சாதுர்யமாக செயல்பட்டு 144 பயணிகள் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Latest News