5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தீபாவளி கூட்ட நெரிசல்.. சென்னையில் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து.. இத்தனை நாட்களா?

Diwali 2024 : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தீபாவளி கூட்ட நெரிசல்.. சென்னையில் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து.. இத்தனை நாட்களா?
ரயில் நிலையம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Oct 2024 07:49 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தீபாவளி பண்டிககை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. வரும் 31 (வியாழன்), நவம்பர் 1 (வெள்ளி), நவம்பர் 2 (சனி), நவம்பர் 3 (ஞாயிறு) எ என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது.

தீபாவளி கூட்ட நெரிசல்

எனவே, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரே நாட்களே உள்ளதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில்களில் செல்வார்கள்.

சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வெளியேறுவார்கள். இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்தவரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால், சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

மேலும், தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருப்பார்கள். இதனால் எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். பயணிகளின் கூட்டத்தை தாண்டியும், அவர்கள் வழியனுப்ப வருவோர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.

Also Read : சென்னை வாசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. வேளச்சேரி – கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தொடக்கம்.. எப்போது?

ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து

இதனால் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, இன்றும், நாளையும் சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் அக்டோபர் 29, 30ஆம் தேதிகளில் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயணம் செய்வோரை வழியனுப்ப வரும் ஒருவருக்கு பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இவர்கள் தீபாவளி நேரத்தில் வழியனுப்ப வந்தால் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், பயணிகளின பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்று, நாளையும் பிளாட்பார்ம் டிக்கெட் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இதனால், பயணிகள் நெரிசல் இன்றி பயணிக்க உதவியாக இருக்கலாம். இருப்பினும், மூத்த குடிமக்கள், மருத்துவ தேவையுள்ள பயணிகளுக்கு விலக்க அளிக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read : ”ஆஃபர் என்பது அரசியலில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும்” – விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா..

சிறப்பு ரயில்கள்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட சென்னை ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். இதனை தடுக்க ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரயில்கள் மட்டுமின்றி  14,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. நேற்று முதல் சென்னையில் இருந்து மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மாதவதம், கிளாம்பாக்கம், கோயம்போடு பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  சென்னையில் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News