குமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி! - Tamil News | PM Modi completes 45 hours meditation at Vivekananda Mandabam in kanniyakumari | TV9 Tamil

குமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!

Published: 

01 Jun 2024 18:24 PM

PM Modi: இன்று 3 மணியளவில், தனது 45 மணி நேர தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். மேலும், அங்குள்ள பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

குமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி

Follow Us On

3 நாள் தியானத்தை பிரதமர் இன்று பிற்பகலில் நிறைவுசெய்துள்ளார். இதன் மூலம் பிரதமரின் 45 மணி நேர தியானம் முடிவுக்கு வந்துள்ளது. தியானத்தை முடித்த பிரதமர் வெளியே வந்தார்.  தியானம் முடிந்து திருவள்ளுவர் சிலைக்கு தனி படகில் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியானத்தை முடித்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார்.நேற்று முன்தினம் மாலை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மாலை 6.45 மணியளவில் தியானத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் மாலையில் இருந்து தியானம் செய்து வரும் அவர், இன்று பிற்பகல் வரை தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் செய்ய இருக்கிறார். கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி மாலை வந்தார்.

பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகு, படகு மூலம் கடல் நடுவே உள்ளவிவேகானந்தர் மண்டபம் சென்றார். அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்தார். பின்னர், விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார்.

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரி வந்தார். அன்று மாலை 3.55 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மோடி மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அதன்பின், 5.45 மணிக்கு விவோகானந்தர் மண்டபத்தில் அவர் தியானம் செய்யத் தொடங்கினார்.

அடுத்த நாளான நேற்று 31ஆம் தேதி வரை இது தொடர்ந்தது. பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவு உணவுகளை மட்டுமே எடுத்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

Also read… TN Weather Alert: நாளை 14 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்!

இன்று 3 மணியளவில், தனது 45 மணி நேர தியானத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் துறை அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். மேலும், அங்குள்ள பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து படகின் மூலமாக திருவள்ளுவர் சிலைக்கு சென்றடைந்தார். திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version