பிரதமர் மோடியிடம் வேட்புமனு பெற்ற ஆட்சியர் தமிழ்நாட்டு காரரா? அடடே செம்ம! - Tamil News | | TV9 Tamil

பிரதமர் மோடியிடம் வேட்புமனு பெற்ற ஆட்சியர் தமிழ்நாட்டு காரரா? அடடே செம்ம!

Published: 

15 May 2024 12:51 PM

தென்காசியைச் சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் என்பவர் பிரதமர் மோடியின் வேட்பு மனுவை பெற்றிருக்கிறார்.

பிரதமர் மோடியிடம் வேட்புமனு பெற்ற ஆட்சியர் தமிழ்நாட்டு காரரா? அடடே செம்ம!

பிரதமர் மோடி - ஆட்சியர் ராஜலிங்கம்

Follow Us On

மோடி வேட்புமனு செய்தவர் தமிழ்நாட்டு காரரா?

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு சென்ற மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  இந்த நிலையில், பிரதமர் மோடியின் வேட்பு மனுவை பெற்ற ஆட்சியர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த எஸ்.ராஜலிங்கம்  என்பவர் பிரதமர் மோடியின் வேட்பு மனுவை பெற்றிருக்கிறார். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read : கணவரை கடைசியாக பார்க்க முடியாத சோகம்.. விமான ஸ்டிரைக்கால் மனைவிக்கு நடந்த சோகம்

யார் இந்த ராஜலிங்கம்?

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது தந்தை சுப்பையா. இவர் இந்தியன் வங்கியில் பணியாற்றியவர். இவரது தாய் மாலையம்மாள். இவர் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தார்.
ராஜலிங்கம் புளியங்குடி செவன்த்டே தனியார் பள்ளியில் படித்தார். பின்னர், திருச்சி என்.ஐ.டியில் பொறியியல் பட்டம் பெற்றார். கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் முதல் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உத்தர பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு நடந்த மற்றொரு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக தேர்வாகி உத்தர பிரதேச மாவட்டத்திலேயே ஆட்சியராக பணியாற்றினார். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு வாரணாசி மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் பொறுப்பேற்றார்.

வாரணாசி தொகுதி:

வாரணாசியில் 7வது கட்ட தேர்தலின்போது (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகள் பெற்றார். மொத்த பதிவான வாக்குகளில் இது 56 சதவீமாகும். 2019 தேர்தலில் 6.74 லட்சம் வாக்குகளை பெற்றார். மொத்த வாக்குகளில் இது 63 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : Narendra Modi : சொந்தமாக கார், வீடு இல்லை..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

 

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version