PM Modi in Kanniyakumari: கன்னியாகுமரிக்கு இன்று தியானம் செய்ய வரும் பிரதமர் மோடி.. உச்சக்கட்ட பாதுகாப்பு!
பிரதமர் மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி சரகடிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில் 8 எஸ்பிக்கள் அடங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் இன்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் மோடி: மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். இன்று மாலை 3.55 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து 3.55 மணிக்கு, அவர் எம்.ஐ.17 ஹெலிகாப்டரில் கன்னியாகுமரிக்கு புறப்படுகிறார். 4.40 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, ஹெலிப்பேடில் இறங்கி காரில் விருந்தினர் விடுதிக்கு செல்கிறார். 5.15 மணி வரை அங்கேயே தங்கியிருக்கும் அவர், 5.20 மணிக்கு அங்கிருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். 5.45 மணிக்கு விவோகானந்தர் மண்டபத்தில் அவர் தியானம் செய்கிறார். அடுத்த நாளான 31ஆம் தேதி வரை இது தொடர்ந்து நீடிக்கிறது. பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவு உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள்.
ஜூன் 1ஆம் தேதி மாலை 3 மணிக்கு விவோகானந்தர் பாறையில் இருந்து அவர் படகு மூலம் புறப்படுகிறார். 3.10 மணிக்கு படகுத்துறையை அடைகிறார். 3.15 மணிக்கு படகுத்துறையில் இருந்து அவர் கார் மூலம் கன்னியாகுமரி ஹெலிபேடை அடைகிறார். 3.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், 4.05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்குகிறார். அங்கிருந்து விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்படுகிறார்.
Also Read: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஜூன் 4ம் தேதி.. வெற்றி யாருக்கு?
பிரதமர் மோடியின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி சரகடிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில் 8 எஸ்பிக்கள் அடங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் இன்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இமயமலை:
கடந்த 2019 மக்களவை தேர்தலும் 7 கட்டங்களாக நடந்தது. கடைசி கட்ட வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நடைபெற்றது. மே 17ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத்துக்கு சென்றார். அப்போது, அவர் சாம்பல் நிற அங்கி, இடுப்பி காவிதுணி, தலையில் பாரம்பரிய உத்தரகண்ட் தொப்பி அணிந்திருந்தார். கேதார்நாத் கோயிலுக்கு வந்து, அரை மணி நேரம் சிறப்பு வழியாடு செய்தார். இதன்பின், கேதார்நாத்தில் உள்ள குகையில் தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்தமுறை கன்னியாகுமரியில் தியானம் செய்கிறார் மோடி. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.