5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Modi : 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

Tamilnadu: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக, மே 30, 31, ஜூன் 1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

PM Modi : 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
பிரதமர்
intern
Tamil TV9 | Updated On: 28 May 2024 13:22 PM

பிரதமர் மோடி : மக்களவை தேர்தலில் பிரதமர் அதிகமாக அரசியல் களப்பணி செய்தது தமிழகத்தில் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்திற்கு கடந்த ஆறு மாதங்களில் பலமுறை வந்து சென்றுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் மார்ச் 16 ஆம் தேதி அறிவித்தது. ஆனால், அதற்கு முன்னரே பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து சென்றார். தேதி அறிவிப்புக்கு பின்னரும் தமிழகத்தில் ரோடுஷோ என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பா நிலையில், 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 7 ஆம் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசியிலும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் தமிழக வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 7 கட்டங்களாக முடிவுபெறும் வாக்குப்பதிவு வரும், ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Also Read: லேப்டாப்க்கு சார்ஜ் போடும்போது விபரீதம்.. பயிற்சி பெண் மருத்துவர் மின்சாரம் தாக்கி மரணம்

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிகிறது. தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் மே 30, 31, ஜூன் 1 ஆகிய 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. 3 நாள் பயணமாக, மே மாதம் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறார். மே 31 ஆம் தேதி மாலை பிரதமர் நரேந்திரமோடி கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு மூலம் சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் ஜூன் 1 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளதாக பிரதமரின் பயணத்திட்டம் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது. 2019 தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி, உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதற்கு முன்னர் ஜனவரி மாதம் தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் பிரார்த்தனை மேற்கொண்டு, புனித நீராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ பட பாடல் வீடியோ இதோ!

பிரதமரின் வருகையை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர்கள் பிரதமரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் துறை அதிகாரிகள் நேற்று விவேகானந்தர் மண்டபம் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் காவல்துறையினர் வாகன சோதனை உட்பட, பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன்ர்.

Latest News