Modi TN Visit: ஜூன் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அடுத்த வாரம் முதல் முறையாக தமிழகம் வருகிறார். வரும் 20ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீப காலமாகவே செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு வருகை தரும் மோடி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அடுத்த வாரம் முதல் முறையாக தமிழகம் வருகிறார். வரும் 20ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீப காலமாகவே செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை டெல்லிக்கும் மேடி தொகுதியான வாரணாசிக்கும் இடையே 2019ல் தொடங்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் உள்ளிட்ட ஆறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு பிச்சு உதற போகுது மழை.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்:
மேலும், சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியமாகுமரிக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்கின்றனர். மோடியின் சென்னை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு உச்சப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அடுத்த வாரம் முதல் முறையாக தமிழகம் வருகிறார். அண்மையில் அவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய ஏப்ரல் முதல் வாரத்தில் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: பவன் கல்யானுக்கு துணை முதல்வர் பதவி.. ஆந்திர அமைச்சரவை இலாக்கா விவரம் வெளியானது!