5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வெட்டிக்கொலை.. ராமதாஸ் கடும் கண்டனம்!

சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கௌரி என்ற பெண் வணிகரை மாமூல் தர மறுத்த காரணத்திற்காக பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்துள்ளார். அதைத் தடுக்க முயன்ற கௌரியின் கணவர் மாரியும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையும், கொலை முயற்சியும் கண்டிக்கத்தக்கவை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Crime: சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வெட்டிக்கொலை.. ராமதாஸ் கடும் கண்டனம்!
கைது செய்யப்பட்ட சேகர்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 13 Nov 2024 12:45 PM

சென்னையில் மாமூல் தர மறுத்ததாக சாலையோர பெண் வியாபாரி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவொற்றியூரில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் மாரி. இவர் தனது மனைவி கௌரியுடன் அதே பகுதியில் சாலை ஓரமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதனுடைய நேற்று மாலை இவர்கள் கடைக்கு வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

அந்த நபர் கத்தியால் தாக்குதல் நடத்துவதை சற்றும் எதிர்பாராத இருவரும் சுதாரிப்பதற்குள் கடுமையாக தாக்கப்பட்டார்கள். இதில் படுகாயம் அடைந்த மனைவி கௌரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே சமயம் மாரிக்கு தலை மற்றும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தம்பதியை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற நபரை அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

Also Read: Crime: கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து.. போலீசார் விசாரணை!

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் உயிரிழந்த கௌரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பலத்த காயமடைந்த மாரியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கௌரியையும் மாரியையும் வெட்டிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்ற பர்மா சேகர் என்பது தெரிய வந்தது. கௌரிக்கும் சேகருக்கும் 10 நாட்கள் முன்பு ஒரு தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக தெரியவந்தது. சம்பவம் நடந்தபோது மதுபோதையில் கடைக்கு வந்த சேகர் கௌரியிடம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் கௌரி தர மறுக்கவே சேகர் கத்தியால் குத்தி கொலை செய்வது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read:  ஜார்க்கண்டில் பாஜக பிரச்சாரத்தில் பிரபல நடிகரின் பர்ஸ் திருட்டு..!

ராமதாஸ் கடும் கண்டனம்

இதனிடையே இந்த கொலை சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை, மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறை போன்ற நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கௌரி என்ற பெண் வணிகரை மாமூல் தர மறுத்த காரணத்திற்காக பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்துள்ளார். அதைத் தடுக்க முயன்ற கௌரியின் கணவர் மாரியும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையும், கொலை முயற்சியும் கண்டிக்கத்தக்கவை.

அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆறுமுகம் என்பவர் இனிப்புக்கடை நடத்தி வந்தார். இந்த கடையைஅ திமுகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன் என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடி இருக்கிறது. சென்னை, மதுரை என தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கவலையளிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம்  ஒழுங்கு சீர்குலையும் என்பது தான் எழுதப்படாத வரலாறாக உள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில் தான் சென்னையில் நிகழ்ந்த கொலையும், மதுரை திருமங்கலத்தில்  கடை சூறையாடப்பட்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது தான் காவல்துறையின் பணியாகும். ஆனால், காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட திமுகவினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில்  முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

ஒரு மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படாவிட்டால், அந்த மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும், மேலும் அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Latest News