மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும் தோல்வி… மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக - Tamil News | PMK party lost its status as a state party | TV9 Tamil

மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும் தோல்வி… மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

Pattali Makkal Katchi: சௌமியா அன்புமணி போட்டியிட்ட தருமபுரி தவிற மீதமுள்ள 9 தொகுதிகளில் பாமக 3வது இடத்தை பிடித்தார்கள். இதில், 6 தொகுதியில் டெபாசிட்டை இழந்தது.  ஏற்கனவே மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்த பாமக ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி மாம்பழம் சின்னத்தை பெருவதை வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த முறை மக்களவை தேர்ததலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கட்டது.

மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும் தோல்வி... மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக

Published: 

06 Jun 2024 14:05 PM

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் குறைவான வாக்கு சதவீதத்தைப் பெற்றதால் பாட்டாளி மக்கள் கட்சி மாநில கட்சி அந்தஸ்தை தற்போது இழந்துள்ளது. சென்னையில் 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்களில் கூட்டணி வைத்தோ தனித்தோ போட்டியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2024-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வந்து இந்த கட்சி தருமபுரி, சேலம், ஆரணி, திண்டுக்கல், அரக்கோணம்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 தொகுதியில் போட்டியிட்டது. இதில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி திமுக வேட்பாளர் மணிக்குட் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வி அடைந்தார்.

இந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 18,79,689 வாக்குகளை (4.30 சதவீதம்) பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகமொத்தமாக 17,58,774 வாக்குகளை (3.8 சதவீதம்) பெற்றது. வடதமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே 4 முதல் 5.5 சதவீத வாக்குகளை பாமக தக்க வைத்து வருகிறது. அதன்படி, இந்த தேர்தலிலும் பாமக தனது வாக்கு சதவீதத்தை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சௌமியா அன்புமணி போட்டியிட்ட தருமபுரி தவிற மீதமுள்ள 9 தொகுதிகளில் பாமக 3வது இடத்தை பிடித்தார்கள். இதில், 6 தொகுதியில் டெபாசிட்டை இழந்தது.  ஏற்கனவே மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்த பாமக ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி மாம்பழம் சின்னத்தை பெருவதை வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த முறை மக்களவை தேர்ததலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கட்டது.

Also read… சுரேஷ் கோபி வெற்றியால் வெடித்த பிரச்னை.. கேரள காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் எடுத்த ஷாக் முடிவு

பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெல்ல வேண்டும் அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெல்ல வேண்டும். எந்த தொகுதியிலும் வெல்லவில்லை என்றால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

இந்நிலையில், பாமக போட்டியிட்ட 10 மக்களவை தொகுதியில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதை அடுத்து அந்த கட்சி மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது.  ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ள நிலையில் தற்போது பாமக கட்சியும் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது குறிப்பட்டத்தக்கது.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?