5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Maanadu: த.வெ.க மாநாட்டில் ரோடு ஷோ நடத்தப்போகிறாரா விஜய்? காவல்துறை முக்கிய தகவல்!

த.வெ.க மாநாடு: நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் ரோடு ஷோ நடத்தப்போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், காவல்துறை விளக்கம் அளித்தாக கூறப்படுகிறது. அதாவது, மாநாட்டிற்கு வரும்போது விஜய் ரோடு ஷோ நடத்தியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் ரோடு ஷோ நடத்த வேண்டாம் என்று காவல்துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TVK Maanadu: த.வெ.க மாநாட்டில் ரோடு ஷோ நடத்தப்போகிறாரா விஜய்? காவல்துறை முக்கிய தகவல்!
த.வெ.க விஜய்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Oct 2024 16:39 PM

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே அவரது அரசியல் பயணம் தொடங்கியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தனது இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய் அதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார். ஏற்கனவே அக்கட்சியின் கொடி மற்றும் கொள்கைப் பாடலை விஜய் வெளியிட்டார்.

நாளை த.வெ.க மாநாடு:

இந்த நிலையில், அக்கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்த வந்த நிலையில், தற்போது முடிவடைய உள்ளது.

இந்த மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் விஜய் நாளை கொடியேற்றி மாநாட்டை துவங்கி வைப்பார். இந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச உள்ளதாக தெரிகிறது.

அத்துடன் தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீட்டுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் விஜய் பேச உள்ளதாகவும் தெரிகிறது.

ரோடு ஷோ நடத்தப்போகிறாரா விஜய்?

மேலும் இந்த மாநாட்டில் விஜய் ரோட் ஷோ நடத்தப்போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் விஜய் வெளியிடவில்லை. கட்சியின் பொதுச் செயலாளரும் புஸ்ஸி ஆனந்தும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், ரோடு ஷோ நடத்த காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, மாநாட்டிற்கு வரும்போது விஜய் ரோடு ஷோ நடத்தியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் ரோடு ஷோ நடத்த வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் மாநாடு நுழைவாயிலில் இருந்து மேடைக்கு நடந்து செல்வோர் என்று கூறப்படுகிறது.

Also Read: மதுரையில் பதிவான 11 செ.மீ மழை.. இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

மேலும், விஜய் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு எப்போது புறப்பட்டு செல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. இவர் இன்று நள்ளிரவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் நாளை காலை அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை தவிர்ப்பதற்காகவே இத்தகையை நடவடிக்கை அவர் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும், மாநாடு நடைபெறும் இடத்தில் அவர் தங்குவதற்கு வசதியாக அங்கு 6 கேரவண்கன் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வசதிகளுடன் கூடிய விஐபி அறை ஒன்றும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

என்னென்ன ஏற்பாடுகள்?

மாநாட்டில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாநாடு மேடை அருகை இணைய வசதி எளிதாக கிடைக்கும் வகையில், தனியார் கம்பெனியின் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாடு நிகழ்வுகளை பார்க்கின்ற வகையில் 600 பெரிய எல்.இ.டி திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு முகப்பு கோட்டையில் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மாமன்னன் ராஜராஜ சோழன், மாவீரன் தீரன் சின்னமலை, மன்ன புலித்தேவன், மாவீரர் மருது சகோதரர்கள், மாவீரன் ஒண்டிவிரன், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர், மாவிரன் அழகு முத்துக்கோன், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், மாவீரன் சுந்தரலிங்கம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.

மாநாடு மேடைக்கு இடதுபுறம் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட் ஆவுட் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மாநாட்டு வரும் தொண்டர்களுக்கு 3 லட்சம் வாட்டர் பாட்டில் நேற்று வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

Also Read: கனமழையால் ஸ்தம்பித்த மதுரை.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்..

மேலும் பிஸ்கட் பாக்கெட்டுகள், மிக்சர் என வரவழைத்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டிற்கு பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வருவார்கள் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டள்ளது. மேலும், பார்க்கிங் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் இடத்தில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஆம்புலஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர் ஆகியார் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது

Latest News